வீடு / சமையல் குறிப்பு / சிவப்பு காராமணி பீட்ரூட் கட்லட்

Photo of Red kidney beans beetroot cutlet by Kalai Rajesh at BetterButter
480
2
0.0(0)
0

சிவப்பு காராமணி பீட்ரூட் கட்லட்

Aug-05-2018
Kalai Rajesh
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

சிவப்பு காராமணி பீட்ரூட் கட்லட் செய்முறை பற்றி

இக்கால தாய்மார்களின் மிகப்பெரிய சவால் தினம் தினம் குழந்தைகளுக்கு பிடித்தமான உணவினை சத்தானதாக கொடுப்பதுதான் , அவ்வகையில் இந்த கட்லெட் அவர்களுக்கு மிகவும் கைகொடுக்கும் , இதில் நிறைய புரதச்சத்து உள்ளது இப்போது அதனை எவ்வாறு செய்வது என்று காண்போம்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • பான் பிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. சிவப்பு காராமணி - 3/4 கப் (இரவு முழுவதும் ஊறவைத்து , வேகவைத்து ,வடித்து தனியே வைத்துக் கொள்ளவும்)
  2. பீட்ரூட் - 1 கப் அல்லது 125 கிராம்
  3. கைக்குத்தல் அரிசி- 50 கிராம் (நன்கு வேக வைத்து கொள்ளவும்)
  4. பெரிய வெங்காயம்- 1 (சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்)
  5. ஓட்ஸ் மாவு- 50 கிராம் அல்லது 5 மேஜைக்கரண்டி
  6. சீரகத்தூள் 1/2 தேக்கரண்டி
  7. பேப்ப்பிரிக்கா தூள் 1 தேக்கரண்டி
  8. எண்ணெய் -தேவையான அளவு
  9. உப்பு - தேவையான அளவு
  10. மிளகுத் தூள் -காரத்திற்கு ஏற்ப
  11. பிரட் தூள் -தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு வட சட்டியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  2. பீட்ரூட்டை துருவி தனியே வைத்துக் கொள்ளவும்
  3. வேகவைத்துள்ள சிவப்பு காராமணியை மிக்ஸியில் சேர்த்து கரகரவென அரைத்து வைத்துக் கொள்ளவும்
  4. ஒரு பெரிய பாத்திரத்தில் துருவிய பீட்ரூட், வேக வைத்துள்ள அரிசி தரதரவென அரைத்து வைத்துள்ள காராமணி அவற்றுடன்,
  5. ஓட்ஸ் மாவு ,உப்பு, பப்பரிக்கா பவுடர் , குறுமிளகு தூள், அனைத்தையும் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்
  6. அனைத்தையும் நன்கு பிசைந்து உப்பும் காரமும் சரிபார்த்துக் கொள்ளவும்
  7. பிசைந்து வைத்துள்ள இந்த மாவை குளிர்சாதன பெட்டியில் 2 மணி நேரம் வைக்கவும்
  8. இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு மாவை வெளியே எடுத்து சம உருண்டைகளாக உருட்ட, மாவை சம அளவில் பிரிக்கவும்.
  9. மாவை சம அளவு உருண்டைகளாக உருட்டி, உள்ளங்கையில் நடுவே வைத்து லேசாக அளித்தி, கட்லெட் வடிவத்தில் செய்து தட்டில் வைக்கவும்.
  10. ஒரு பேனில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடேற்றவும், ரெடியாக வைத்துள்ள கட்லெட்டை பிரேட் தூளில் பிரட்டி, பான் பிரை செய்யவும் (எண்ணையில் பொரிக்க வேண்டாம்)
  11. வெந்தவுடன் சூடாக பரிமாறவும், தனியாக அல்லது பிரட்டின் நடுவே வைத்தும் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்