வீடு / சமையல் குறிப்பு / பச்சைபயறு பனியாரம்

Photo of Green gram Paniyaram by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
0
1
0(0)
0

பச்சைபயறு பனியாரம்

Aug-05-2018
Wajithajasmine Raja mohamed sait
360 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பச்சைபயறு பனியாரம் செய்முறை பற்றி

பச்சைபயறு பனியாரம்.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • చిరు తిండి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பச்சை பயறு -1 கப்
  2. உளுந்து -1/2 கப்
  3. இட்லி அரிசி -3 தேக்கரண்டி
  4. வெல்லம் -1 கப்
  5. தேங்காய் துருவல் -3 தேக்கரண்டி
  6. ஏலக்காய் தூள் - சிறிதளவு
  7. நெய் -சிறிதளவு

வழிமுறைகள்

  1. முதலில் பச்சை பயறை நன்கு கழுவி 6-8 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும் .
  2. உளுந்து மற்றும் இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.
  3. மிக்சியில் உளுந்து மற்றும் அரிசியை சேர்த்த நன்கு அரைத்துக்கொள்ளவும்.
  4. ஊறிய பச்சை பயறையும் நன்கு அரைத்துக்கொள்ளவும்.
  5. அரைத்த உளுந்து மற்றும் பயறு கலவையை சிறிதளவு உப்பு சேர்த்து 6 மணி நேரம் புளிக்கவிடவும்.
  6. 6 மணி நேரம் கழித்து மாவு நன்கு புளித்ததும் அதனுடன் கெட்டியான வெல்லப்பாகினை சேர்க்கவும்.
  7. பின்பு அதனுடன் தேங்காய் துருவல், சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
  8. இப்பொழுது பனியாரம் செய்ய மாவு தயார்.
  9. அடுப்பில் குழி பனியாரம் கல்லை வைத்து அதில் சிறிதளவு நெய் விடவும். பின்பு மாவை ஊற்றவும்.
  10. ஒரு பக்கம் நன்கு வெந்ததும் திருப்பி சிறிதளவு நெய் விட்டு மறு பக்கம் வேகவிடவும்.
  11. சுவையான மற்றும் ஆரோக்கியமான பச்சை பயறு பனியாரம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்