வீடு / சமையல் குறிப்பு / உளுந்து வடை

Photo of Urad Dal Vadai by Jayasakthi Ekambaram at BetterButter
538
0
0.0(0)
0

உளுந்து வடை

Aug-06-2018
Jayasakthi Ekambaram
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

உளுந்து வடை செய்முறை பற்றி

உளுந்தை ஊறவைத்து அரைத்து செய்யும் ஒரு பண்டம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தோல் இல்லாத உளுந்து 200கிராம்
  2. வெங்காயம் ஒன்று
  3. பச்சை மிளகாய் 2
  4. கறிவேப்பிலை ஒரு கொத்து
  5. கொத்தமல்லி அரை கைப்பிடி அளவு
  6. எண்ணெய் அரை லிட்டர்
  7. உப்பு தேவையான அளவு
  8. இஞ்சி ஒரு சிறிய துண்டு

வழிமுறைகள்

  1. உளுந்தை தண்ணீரில் ஒரு முறை கழுவி தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
  2. அந்த நேரத்தில் வெங்காயம் கொத்தமல்லி கருவேப்பிலை இவற்றை பொடியாக அரிந்து கொள்ளவும்
  3. ஒரு மணி நேரத்திற்கு பிறகு தண்ணீரை சுத்தமாக வடிகட்டி உளுந்தை கிரைண்டரில் போட்டு நைஸாக அரைக்கவும்
  4. அரைக்கும்போது பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் இஞ்சி உப்பு இவற்றை சேர்த்து அரைக்கவும்
  5. மாவை தண்ணீரில் போட்டு பார்க்கவேண்டும் தண்ணீரில் மாவு மிதந்தால் சரியான பதத்தில் மாவு ரெடி.
  6. மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி விட வேண்டும் அதில் வெங்காயத்தையும் கருவேப்பிலை கொத்தமல்லி கலந்து கொள்ள வேண்டும்
  7. எல்லாவற்றையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்
  8. ஒரு வாணலியில் எண்ணெயை காய வைத்து வடைகளை தட்டி போட வேண்டும்
  9. இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும் தட்டில் எடுத்து வைக்க வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்