வீடு / சமையல் குறிப்பு / வால்நட் ரவா லட்டு

Photo of Walnut rava ladoo by Adaikkammai Annamalai at BetterButter
600
4
0.0(0)
0

வால்நட் ரவா லட்டு

Aug-06-2018
Adaikkammai Annamalai
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வால்நட் ரவா லட்டு செய்முறை பற்றி

லட்டு நம் அனைவருக்கும் பிடித்த ஒரு பண்டிகை என்றால் கண்டிப்பாக இருக்க கூடிய ஒரு இனிப்பு வகை ,, இதில் எப்படி சத்துள்ளதாக ஆக்குவது என்று யோசித்தால் பிள்ளைகள் வால்நட் சாப்பிடமாட்டர்கள், ஏனென்றால் அது சிறிது கசப்பாக இருக்கும், ஆனால் அதிலிருக்கும் பயனை கை விட்டு என்ன முடியாது , மூளை, இருதயம் அனைத்திற்கும் நல்லது, புரத சத்துடையது எனவே குழந்தைகள் இனிப்பு சாப்பிட மறுக்கமாட்டார்கள், அதை காரணமாக வைத்த அதிலின்டய ட்விஸ்டை வைத்துள்ளேன் வால்நட்டுடன் ரவை வெள்ளம் சேர்த்து சத்தான இனிப்பான லட்டூ செய்தேன் ,,

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஃப்யூஷன்
  • ஸ்டிர் ஃபிரை
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வால்நட் - 1/4 kg
  2. ரவை - 1/4 கப்
  3. துருவிய வெல்லம் - 1/2 கப்
  4. நெய் - 5 tsp

வழிமுறைகள்

  1. வால்நட்டை அரை மணிநேரம் ஊறவைக்கவும் பின் ப்ளேண்டேரில் அரைத்து தண்ணீர் சேர்க்காமல் எடுத்துக்கொள்ளவும்
  2. அதன் பிறகு வெறும் பேனில் ரவையை பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்
  3. பின் பேனில் நெய் சேர்த்து அரைத்த வால்நட் கலவையை சேர்த்து கிண்டவும், பின் ரவையை அதில் கொஞ்சம் கொஞ்சமாக கட்டிப்படாமல் சேர்க்கவும் சேர்த்து கிளறவும்
  4. ரவை நன்றாக வெந்த பின் துருவிய வெல்லம் சேர்த்து இழுத்து கிண்டவும்,வெல்லம் இளகி நெய் மேலே விட்டு கெட்டியாக இறுகி வரும் போது அடுப்பை அணைத்து இறக்கவும்
  5. சூட்டுடன் கையில் நெய் தடவி உருண்டை பிடிக்கவும், சுவையான வால்நட் ரவா லட்டு தயார்
  6. மேலே பிடித்த முந்திரி பாதாம் தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்