வீடு / சமையல் குறிப்பு / மண்சட்டி மிளகு காடை குழம்பு

Photo of Kaadai pepper curry in pot by Meera Ansari at BetterButter
415
1
0.0(0)
0

மண்சட்டி மிளகு காடை குழம்பு

Aug-06-2018
Meera Ansari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

மண்சட்டி மிளகு காடை குழம்பு செய்முறை பற்றி

மணமணக்கும் மண்சட்டியில் மிளகு காடை குழம்பின் விரிவாக்கம் இது உடலுக்கு ஆரோக்கியமானது

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. காடை அரை கிலோ
  2. சின்ன வெங்காயம் ஒரு கப்
  3. தக்காளி-2
  4. பச்சை மிளகாய் 2
  5. மிளகு 2 மேஜைக்கரண்டி
  6. சீரகம் ஒரு மேசைக்கரண்டி
  7. மல்லி ஒரு மேசைக்கரண்டி
  8. பெருஞ்சீரகம் அரை மேசைக்கரண்டி
  9. மிளகாய் தூள் அரை மேசைக்கரண்டி
  10. மஞ்சள் தூள் சிறிதளவு
  11. இஞ்சி பூண்டு விழுது இரண்டு மேசைக்கரண்டி
  12. ஏலக்காய் பட்டை சிறிதளவு
  13. நல்லெண்ணெய் 2 மேஜைக்கரண்டி
  14. தேங்காய் ஒரு கப்
  15. உப்பு சிறிதளவு
  16. மல்லி இலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. மண் சட்டி சூடானதும் நல்லெண்ணெயை விட்டு சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கி கொள்ளவும்
  2. மிக்ஸியில் தக்காளியை அடித்துக் கொள்ளவும்
  3. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
  4. அரைத்து வைத்த தக்காளி கலவையை சேர்க்கவும்
  5. மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும்
  6. பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்
  7. பிறகு உப்பு சேர்த்து காடையை சேர்க்கவும்
  8. தண்ணீர் சேர்த்து சிறு தீயில் வைத்து வேக விடவும்
  9. மற்றொரு கடாயை சூடு படுத்தி மிளகு சீரகத்தை எண்ணெய் இல்லாமல் வறுத்து கொள்ளவும்
  10. பிறகு பெருஞ் சீரகம் மல்லியை வறுத்து கொள்ளவும்
  11. ஏலக்காய் பட்டை வறுத்துக் கொள்ளவும்
  12. பிறகு வறுத்த மிளகு சீரகம் பெருஞ்சீரகம் மல்லி ஏலக்காய் மற்றும் பட்டையை மிக்ஸியில் பொடியாக நன்கு திரித்துக் கொள்ளவும்
  13. இந்த பொடியுடன் தேங்காயை நைசாக அரைத்துக் கொள்ளவும்
  14. காடை வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்க்கவும்
  15. நன்கு கொதிக்க விடவும்
  16. 5 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து மல்லி இலை மிளகுத்தூள் தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்