வீடு / சமையல் குறிப்பு / பச்சை பயறு முட்டை தோசை

Photo of Green gram egg dosa by Rachell Revathi Samuel at BetterButter
334
1
0.0(0)
0

பச்சை பயறு முட்டை தோசை

Aug-08-2018
Rachell Revathi Samuel
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பச்சை பயறு முட்டை தோசை செய்முறை பற்றி

புரதச் சத்து நிறைந்த பச்சை பயறு மற்றும் முட்டை சேர்த்து சேர்த்து செய்யப்படும் தோசை வகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சை பயறு 1/4 கப்
  2. முட்டை
  3. பச்சை மிளகாய் 3
  4. இஞ்சி 1 துண்டு
  5. மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. கேரட் 1
  8. வெங்காயம் 1
  9. கொத்தமல்லி
  10. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  11. மிளகுத்தூள் 1 ஸ்பூன்
  12. மஞ்சள்தூள்
  13. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பச்சை பயறை 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. மிக்ஸியில் பச்சை பயறு பச்சை மிளகாய் இஞ்சி மஞ்சள்தூள் உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  3. சிறிது தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்
  4. வெங்காயத்தை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும்.கேரட்டை துருவிக் கொள்ளவும்.கொத்தமல்லி தழையை வெட்டிக் கொள்ளவும்.
  5. அடுப்பில் தோசைக் கல்லை வைத்து எண்ணெய் தடவி தோசை ஊற்றவும்.
  6. தோசை மீது முட்டையை உடைத்து ஊற்றவும்.தோசை கரண்டி வைத்து தோசை மீது பரப்பி விடவும்.
  7. உப்பு கேரட் வெங்காயம் கொத்தமல்லி மிளகாய்த்தூள் மற்றும் மிளகுத்தூளை தோசை மீது தூவி விடவும்.
  8. இரு புறமும் திருப்பி நன்றாக வேகவைத்து எடுக்கவும்.சுவையான பச்சை பயறு முட்டை தோசை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்