வீடு / சமையல் குறிப்பு / கேழ்வரகு அடை, தேங்காய் சட்னி

Photo of Kealviragu adai, coconut chutini by Kalpana Kalpu at BetterButter
361
0
0.0(0)
0

கேழ்வரகு அடை, தேங்காய் சட்னி

Aug-08-2018
Kalpana Kalpu
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கேழ்வரகு அடை, தேங்காய் சட்னி செய்முறை பற்றி

ஸ்மால் ஸ்னாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தேவையானவை:
  2. கேழ்வரகு - 500 கிராம்
  3. பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 150 கிராம்
  4. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2 டீஸ்பூன்
  5. பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - 1 டீஸ்பூன்
  6. உப்பு - தேவையான அளவு
  7. நல்லெண்ணெய் - பொரிக்க‌
  8. சட்னிக்கு :
  9. துருவிய தேங்காய் - 200 கிராம்
  10. பூண்டு பல் - 2
  11. பொரிக்கடலை - 25 கிராம்
  12. காய்ந்த மிளகாய் - 3
  13. உப்பு - தேவையான அளவு
  14. தாளிக்க:
  15. கடுகு - ஒரு டீஸ்பூன்
  16. கறிவேப்பிலை - சிறிதளவு
  17. எண்ணெய் - பொரிக்க‌

வழிமுறைகள்

  1. செய்முறை: 1.கேழ்வரகை ஒரு நாள் இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவேண்டும்.
  2. 2. மறுநாள் தண்ணீரை இறுத்து புதிதாகத் தண்ணீர் சேர்த்துக் கெட்டியான மாவாக அரைத்து வைக்கவும்.
  3. 3. இதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்துக் நன்றாக கலக்கவும்.
  4. 4. அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய வைக்க வேண்டும்.
  5. 5. பின்பு மாவை கொஞ்சமாக எடுத்து வட்ட வடிவில் செய்து தோசைக்கல்லில் வைக்கவும்.
  6. 6. பின்பு மாவை இருபுறமும் வேகவைத்து எடுத்து கொள்ளவேண்டும்.
  7. 7. பின்பு சட்னிக்குத் தேவையானதை எல்லாம் மிக்ஸியில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து, ஒரு பவுலில் வைக்கவும்.
  8. 8. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து எடுத்து கொள்ள வேண்டும்.
  9. 9. பின்பு சட்னியைய் ஊற்றி அடையோடு பரிமாற வேண்டும்..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்