Photo of Keema soya tikki by Mughal Kitchen at BetterButter
1010
3
0.0(1)
0

Keema soya tikki

Aug-08-2018
Mughal Kitchen
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மட்டன் கீமா 250 கிராம்
  2. சோயாபீன்ஸ் 250 கிராம்
  3. எண்ணெய் தேவையான அளவு
  4. இஞ்சி பூண்டு விழுது ஒரு மேசைக்கரண்டி
  5. மஞ்சள் தூள் சிறிது
  6. கரம் மசாலா தூள் ஒரு டீஸ்பூன்
  7. சீரகத்தூள் ஒரு டீஸ்பூன்
  8. பச்சை மிளகாய் 3
  9. மிளகாய்வற்றல் 2
  10. தேங்காய் சிறிது
  11. முட்டை ஒன்று
  12. வெங்காயம் ஒரு சிறிய கப் நறுக்கியது
  13. மல்லி செடி சிறிது

வழிமுறைகள்

  1. அடுப்பில் வாணலியை வைத்து மட்டன் கீமாவை சேர்த்து உப்பு சீரகம் மிளகாய் வற்றல் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு சேர்த்து கறியில் உள்ள நீர் வற்றும் வரை வேக வைக்கவும்
  2. இந்த பக்குவத்தில் அடுப்பை அணைக்கவும்
  3. சோயா பீன்ஸை வேக வைத்து நீரை வடித்து வைக்கவும்
  4. வேகவைத்த கறியுடன் கரம் மசாலாத்தூள் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் சீரகத்தூள் மல்லிச்செடி சேர்க்கவும்
  5. இந்த கலவையை மிக்ஸியில் அரைக்கவும்
  6. கறி அரைத்தபின் தேங்காய் சோயாவை சேர்த்து அரைக்கவும்
  7. மிக்ஸியில் அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றவும்
  8. அரைத்த கலவையில் முட்டை வெங்காயம் பச்சை மிளகாய் மல்லித்தழை சேர்த்து கலக்கவும்
  9. உப்பு சேர்த்துப் பிசையவும்
  10. கையில் சிறிது எண்ணையைத் தடவி கட்லெட் வடிவத்தில் தட்டவும்
  11. அடுப்பில் வானலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் டிக்கியை சேர்க்கவும்.பின் மறுபுறம் திருப்பி வேந்த பின் எடுக்கவும்
  12. மிதமான தீயில் பொரிக்கவும்
  13. புதினா சட்னி மயோனைஸ் உடன் சாப்பிட நன்றாக இருக்கும்.கீமா சோயா டிக்கி ரெடி

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Maharasi Devendiran
Aug-08-2018
Maharasi Devendiran   Aug-08-2018

நன்றாக உள்ளது

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்