வீடு / சமையல் குறிப்பு / நவதானிய வடை\ஒன்பதுவகை பருப்பு வடை:

Photo of Navathaniya vadai by suganya balusamy at BetterButter
847
1
0.0(0)
0

நவதானிய வடை\ஒன்பதுவகை பருப்பு வடை:

Aug-08-2018
suganya balusamy
600 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நவதானிய வடை\ஒன்பதுவகை பருப்பு வடை: செய்முறை பற்றி

புரதச்சத்து மிகுந்த மாலை நேர ஸ்நாக்ஸ்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஊற வைப்பதற்கு:
  2. 1 மேஜைக்கரண்டி கொள்ளு
  3. 1 மேஜைக்கரண்டி தட்டைப்பயறு
  4. 1 மேஜைக்கரண்டி கறுப்பு கொண்டைக்கடலை
  5. 1 மேஜைக்கரண்டி வெள்ளை கொண்டைக்கடலை
  6. 1 மேஜைக்கரண்டி காய்ந்த பட்டாணி
  7. 1 மேஜைக்கரண்டி பச்சைப்பயறு
  8. 1 கப் துவரம் பருப்பு
  9. 1/2 கப் கடலைப்பருப்பு
  10. 1/4 கப் வெள்ளை உளுந்துப்பருப்பு
  11. அரைப்பதற்கு:
  12. சிறிய துண்டு இஞ்சி
  13. 1 கொத்து கறிவேப்பிலை
  14. 5 காய்ந்த மிளகாய்
  15. கல் உப்பு தேவையான அளவு
  16. ஊற வைத்த பருப்பு
  17. வடை செய்வதற்கு:
  18. 1/2 கப் பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ்
  19. 2 மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய மல்லித்தழை
  20. 1 1/2 மேஜைக்கரண்டி துருவிய தேங்காய்
  21. 1/4 தேக்கரண்டி மஞ்சள்த்தூள்
  22. 1/4 தேக்கரண்டி பெருங்காயத்தூள்
  23. அரைத்த பருப்பு விழுது
  24. எண்ணெய் பொரிக்க தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கொள்ளு,தட்டைப்பயறு,கறுப்பு கொண்டைக்கடலை,வெள்ளை கொண்டைக்கடலை,காய்ந்த பட்டாணி,பச்சைப்பயறு நன்கு கழுவி 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. துவரம் பருப்பு,கடலைப்பருப்பு,வெள்ளை உளுந்துப்பருப்பு நன்கு கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  3. மிக்ஸியில் இஞ்சி,கறிவேப்பிலை,காய்ந்த மிளகாய்,உப்பு சேர்த்து ஒரு சுற்று விடவும்.இதனுடன் ஊற வைத்த பருப்புகளையும் சேர்த்து தண்ணீர் இன்றி கொரகொரப்பாக அரைக்கவும்.
  4. கடாயில் வடை பொரிப்பதற்கு எண்ணெயை காய வைக்கவும்.
  5. அரைத்த பருப்பு விழுதுடன்,நறுக்கிய முட்டைக்கோஸ்,மல்லித்தழை,மஞ்சள்த்தூள்,பெருங்காய்த்தூள்,துருவிய தேங்ஙாய் சேர்த்து பிசையவும்.
  6. எண்ணெய் காய்ந்தவுடன் பருப்பு கலவையை வடைகளாக தட்டி பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்