வீடு / சமையல் குறிப்பு / மிக்ஸ்டு டால் ஸ்டீம்ட் வடகறி

Photo of Mixed dal steamed vadacurry by Krishnasamy Vidya Valli at BetterButter
431
1
0.0(0)
0

மிக்ஸ்டு டால் ஸ்டீம்ட் வடகறி

Aug-08-2018
Krishnasamy Vidya Valli
35 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மிக்ஸ்டு டால் ஸ்டீம்ட் வடகறி செய்முறை பற்றி

சென்னையின் மிகவும் பிரபலமான வடகறி காலையில் எண்ணெயில் பொரித்து மீதமான பட்டாணி பருப்பு வடையை வைத்து செய்வார்கள். ஆனால் நான் 4 வகை பருப்புகள் வைத்து ஆரோக்கியமாக ஆவியில் வேகவைத்து செய்துள்ளேன்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஃப்யூஷன்
  • ஸ்டிர் ஃபிரை
  • ஸ்டீமிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வடைக்கு தேவையானவை
  2. உருட்டு உளுந்து துவரம் பருப்பு பாசிப்பருப்பு கடலைப்பருப்பு தலா ஒரு மேஜைக்கரண்டி
  3. உப்பு கால் தேக்கரண்டி-2 சிட்டிகை (2 சிட்டிகை குறைவாக போடவும்)
  4. பெருங்காயம் 2 சிட்டிகை
  5. மிளகாய்வற்றல் 2
  6. பெருஞ் சீரகம் கால் தேக்கரண்டி
  7. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு
  8. கிரேவிக்கு தேவையானவை
  9. பெரிய வெங்காயம் ஒன்று
  10. தக்காளி ஒன்று
  11. உப்பு கால் தேக்கரண்டி
  12. தனியா பொடி அரை தேக்கரண்டி
  13. காரப் பொடி கால் தேக்கரண்டி
  14. மஞ்சள் பொடி கால் தேக்கரண்டி
  15. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது ஒரு தேக்கரண்டி
  16. அப்படியே அரைக்க தேவையானவை
  17. தேங்காய்த்துருவல் 2 மேஜைக்கரண்டி
  18. பெருஞ்சீரகம் அரை தேக்கரண்டி
  19. ஏலக்காய் கிராம்பு தலா ஒன்று
  20. பட்டை ஒரு சிறிய துண்டு
  21. தாளிக்க தேவையானவை
  22. எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  23. சீரகம் அரை தேக்கரண்டி
  24. பட்டை ஒரு சிறிய துண்டு
  25. ஏலக்காய் கிராம்பு தலா 2
  26. இஞ்சி பூண்டு விழுது அரை தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பருப்பு வகைகளை தண்ணீர் விட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும்
  2. தண்ணீரை வடிகட்டிவிட்டு வடைக்காக கொடுக்கப்பட்ட பொருட்களில் கருவேப்பிலை தவிர மற்ற எல்லாம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  3. கருவேப்பிலை சேர்த்து கலந்து சிறு சிறு உருண்டைகளாக இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும்
  4. அரைக்க கொடுத்தவற்றை அரைத்துக் கொள்ளவும்
  5. தாளிக்கக் கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  6. தக்காளி சேர்த்து வதக்கி உப்பு காரப் பொடி தனியா பொடி மஞ்சள் பொடி சேர்த்து கிளறவும்
  7. அரைத்த விழுது மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கிளறவும்
  8. வேகவைத்து எடுத்த வடையை அதில் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்
  9. கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்