வீடு / சமையல் குறிப்பு / தந்தூரி சிக்கன் டிக்கா,மலாய் சிக்கன் டிக்கா& ஹரியாலி சிக்கன் டிக்கா

Photo of Tandoori Chicken Tikka,Malai Chicken Tikka & Hariyali Chicken Tikka by Menaga Sathia at BetterButter
0
1
0(0)
0

தந்தூரி சிக்கன் டிக்கா,மலாய் சிக்கன் டிக்கா& ஹரியாலி சிக்கன் டிக்கா

Aug-08-2018
Menaga Sathia
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தந்தூரி சிக்கன் டிக்கா,மலாய் சிக்கன் டிக்கா& ஹரியாலி சிக்கன் டிக்கா செய்முறை பற்றி

தந்தூரி டிக்கா,மலாய் டிக்கா,ஹரியாலி டிக்கா என 3வண்ணங்களில் செய்த டிக்கா இது.மேலும் சுதந்திரதின விழா வருவதால் அதற்காகவும் செய்தது.

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • మీడియం/మధ్యస్థ
  • రాత్రి విందు
  • ఉత్తర భారతీయ
  • బేకింగ్
  • భోజనానికి ముందు తినే పతార్థాలు / అపెటైజర్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஹரியாலி சிக்கன் செய்ய:
  2. சிக்கன் துண்டுகள் -1/4 கிலோ
  3. புதினா -1 கைப்பிடி
  4. கொத்தமல்லிதழை -1 கைப்பிடி
  5. உப்பு - தேவைக்கு
  6. எலுமிச்சைசாறு -2 டீஸ்பூன்
  7. மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
  8. கெட்டி தயிர் -2 டீஸ்பூன்
  9. இஞ்சிபூண்டு விழுது-1 டீஸ்பூன்
  10. பச்சைமிளகாய் விழுது -1 டீஸ்பூன்
  11. கடுகு எண்ணெய் -1 டீஸ்பூன்
  12. வெண்ணெய் -மேலே தடவ
  13. தந்தூரி சிக்கன் செய்ய:
  14. சிக்கன் துண்டுகள் -1/4 கிலோ
  15. உப்பு - தேவைக்கு
  16. கடுகு எண்ணெய்-1 டீஸ்பூன்
  17. கெட்டி தயிர் -1 டீஸ்பூன்
  18. எலுமிச்சைசாறு -1 டேபிள்ஸ்பூன்
  19. வரமிளகாய்தூள் -1 டேபிள்ஸ்பூன்
  20. சீரகத்தூள் -1/2 டீஸ்பூன்
  21. கரம்மசாலா -1/4 டீஸ்பூன்
  22. இஞ்சிபூண்டு விழுது -2 டீஸ்பூன்
  23. தனியாதூள் -1 டீஸ்பூன்
  24. காஷ்மீரி மிளகாய்தூள் -2 டீஸ்பூன்
  25. ஓமம் -1/2 டீஸ்பூன்
  26. கடலைமாவு -2 டேபிள்ஸ்பூன்
  27. எண்ணெய் -2 டீஸ்பூன்
  28. வெண்ணெய் -மேலே தடவ
  29. மலாய் டிக்கா செய்ய:
  30. சிக்கன் துண்டுகள் -1/4 கிலோ
  31. பச்சைமிளகாய் விழுது -2 டீஸ்பூன்
  32. இஞ்சிபூண்டு விழுது -1 டீஸ்பூன்
  33. சோளமாவு -2 டீஸ்பூன்
  34. உப்பு -தேவைக்கு
  35. ப்ரெஷ் க்ரீம் -2 டீஸ்பூன்
  36. கெட்டி தயிர் - 1 டீஸ்பூன்
  37. ஏலக்காய்த்தூள் -1/2 டீஸ்பூன்
  38. கடுகு எண்ணெய் -1 டீஸ்பூன்
  39. மிளகுதூள் -1/2 டீஸ்பூன்
  40. வெண்ணெய் -மேலே தடவு
  41. மூங்கில் குச்சிகள் -தேவைக்கு

வழிமுறைகள்

  1. ஹரியாலி சிக்கன் செய்ய கொடுத்துள்ள பொருட்களில் புதினா,கொத்தமல்லியை நைசாக அரைத்து வெண்ணெய் தவிர மற்ற பொருட்களோடு கலந்து ஊறவைக்கவும்.
  2. மலாய் டிக்கா செய்ய கொடுத்துள்ள பொருட்களில் வெண்ணெய் தவிர அனைத்தையும் கலந்து ஊறவைக்கவும்.
  3. தந்தூரி டிக்கா செய்ய: எண்ணெயை சூடு செய்து ஓமம் சேர்த்து தாளித்து கடலைமாவு சேர்த்து தீயாமல் வறுத்து ஆறவைக்கவும்.
  4. இதனோடு வெண்ணெய் தவிர அனைத்தையும் கலந்து ஊறவைக்கவும்.
  5. 3 வகை டிக்காகளையும் குறைந்தது 2 மணிநேரம் அல்லது முதல்நாள் இரவு ஊறவைக்கவும்.
  6. மூங்கில் குச்சிகளை நீரில் 30 நிமிடங்கள் ஊறவிடவும்.
  7. அவனை 210°செல்சியஸ் முற்சூடு செய்யவும்.
  8. பேக்கிங் டிரேயில் எண்ணெய் தடவி மூங்கில் குச்சியில் சொருகி 30 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
  9. இடையிடையே திருப்பிவிடவும்.வெந்ததும் வெண்ணெயை ப்ரெஷ்ஷால் தடவிவிடவும்.
  10. பச்சை சட்னியுடன் பரிமாற நன்றாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்