வீடு / சமையல் குறிப்பு / வறுத்தரைச்ச முப்பயறு புளிக்குழம்பு

Photo of Varutharacha Mupayaru Pulikuzhambu by Sowmya Sundar at BetterButter
189
1
0.0(0)
0

வறுத்தரைச்ச முப்பயறு புளிக்குழம்பு

Aug-09-2018
Sowmya Sundar
600 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வறுத்தரைச்ச முப்பயறு புளிக்குழம்பு செய்முறை பற்றி

மூன்று வகை பயிறுகளான தட்டாம்பயறு, கொண்டைகடலை மற்றும் சிவப்பு ராஜ்மாவுடன் புதிதாக வறுத்து அரைத்த மசாலா சேர்த்து செய்த புளிக்குழம்பு . புரதச்சத்து மிகுந்த குழம்பு வகை இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ப்லெண்டிங்
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொண்டைகடலை -1/4 கப்
  2. சிவப்பு ராஜ்மா-1/4 கப்
  3. தட்டாம்பயறு- 1/4 கப்
  4. புளி- எலுமிச்சை அளவு
  5. நல்லெண்ணெய்-3 டேபிள் ஸ்பூன்
  6. கடுகு-1 டீஸ்பூன்
  7. வெந்தயம்-1/2 டீஸ்பூன்
  8. கறிவேப்பிலை சிறிது
  9. உப்பு தேவையான அளவு
  10. பெருங்காயம்- 1/2 டீஸ்பூன்
  11. மஞ்சள் தூள்-1/2 டீஸ்பூன்
  12. தேங்காய் துருவல்-1/4 கப்
  13. வறுத்து அரைக்க:
  14. கடலை பருப்பு-2 டேபிள் ஸ்பூன்
  15. உளுத்தம்பருப்பு-1 டேபிள் ஸ்பூன்
  16. மல்லி விதை-1 டீஸ்பூன்
  17. மிளகாய் வற்றல்-4

வழிமுறைகள்

  1. பயறு வகைகளை தண்ணீர் விட்டு பத்து மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பின்னர் குக்கரில் உப்பு சேர்த்து வேக வைத்து வடித்து கொள்ளவும்
  3. கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்க கொடுத்துள்ள பொருட்களை பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்
  4. கடாயில் மீதி எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை தாளித்து புளிகரைசல், மஞ்சள் தூள், பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் வேக வைத்த பயறு வகைகள் சேர்த்து கொதிக்க விடவும்.
  5. புளி பச்சை வாசனை போக கொதித்ததும் அரைத்த விழுதை சேர்த்து கெட்டியானதும் இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்