வீடு / சமையல் குறிப்பு / பச்சை பயறு மசாலா தோசை

Photo of Green gram masala dosa by Rachell Revathi Samuel at BetterButter
235
1
0.0(0)
0

பச்சை பயறு மசாலா தோசை

Aug-09-2018
Rachell Revathi Samuel
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பச்சை பயறு மசாலா தோசை செய்முறை பற்றி

பச்சை பயறு தோசையில் மசாலா சேர்த்து செய்யப்படும் தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சை பயறு 1/4 கப்
  2. பச்சை மிளகாய் 3
  3. இஞ்சி 1 துண்டு
  4. மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் தேவையான அளவு
  7. நெய் தேவையான அளவு
  8. வெங்காயம் 1
  9. மிளகாய்த்தூள் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பச்சை பயறை 8 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. மிக்ஸியில் பச்சை பயறு பச்சை மிளகாய் இஞ்சி உப்பு மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
  3. மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி விடவும்.
  4. அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சிறிது எண்ணெய் தடவி மாவை தோசையாக ஊற்றவும்.
  5. அதின் மேல் நறுக்கிய வெங்காயம் மிளகாய்த்தூளை தூவி விடவும்.தோசை மீதும் ஓரங்களிலும் நெய் ஊற்றி விடவும்.
  6. இரு புறமும் திருப்பி போட்டு வேகவைத்து எடுக்கவும்.சுவையான பச்சை பயறு மசாலா தோசை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்