வீடு / சமையல் குறிப்பு / கொள்ளு மசியல் மற்றும் கொள்ளு சூப்

Photo of Horse gram masiyal by Rachell Revathi Samuel at BetterButter
260
3
0.0(0)
0

கொள்ளு மசியல் மற்றும் கொள்ளு சூப்

Aug-09-2018
Rachell Revathi Samuel
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கொள்ளு மசியல் மற்றும் கொள்ளு சூப் செய்முறை பற்றி

கொள்ளு கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர அனைவரும் உண்ணக் கூடிய சத்தான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கொள்ளு 1/4 கப்
  2. எண்ணெய் 1 ஸ்பூன்
  3. கடுகு உளுத்தம்பருப்பு 1/2 ஸ்பூன்
  4. கொத்தமல்லி விதை 1 ஸ்பூன்
  5. வெங்காயம் 1
  6. பூண்டு 2 பல்
  7. கருவேப்பிலை சிறிது
  8. பச்சை மிளகாய் 2
  9. உப்பு தேவையான அளவு
  10. மிளகு சீரகத்தூள் 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. அடுப்பில் வாணலியை வைத்து கொள்ளை 2 நிமிடங்கள் வறுத்துக் கொள்ளவும்.
  2. வறுத்த கொள்ளை குக்கரில் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.தண்ணீரை வடித்து வைக்கவும்.
  3. கொள்ளு வேக வைத்த தண்ணீரில் மிளகு சீரகத்தூள் சேர்த்தால் கொள்ளு சூப் தயார்.
  4. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கொத்தமல்லி விதை சேர்க்கவும்.
  5. பின் வெங்காயம் பூண்டு கருவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
  6. வேகவைத்த கொள்ளு சேர்த்து நன்றாக வதக்கவும்.
  7. நன்றாக வதங்கியதும் அடுப்பில் இருந்து இறக்கி பருப்பு மத்தை வைத்து நன்றாக மசிக்கவும்.
  8. நன்றாக மசித்து கொள்ளவும்.
  9. சுவையான கொள்ளு மசியல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்