வீடு / சமையல் குறிப்பு / நெத்திலி மீன் பூண்டு குழம்பு

Photo of Anchovy fish curry by Hasina Hussain at BetterButter
569
2
0.0(0)
0

நெத்திலி மீன் பூண்டு குழம்பு

Aug-09-2018
Hasina Hussain
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

நெத்திலி மீன் பூண்டு குழம்பு செய்முறை பற்றி

பிரசவித்த பெண்களுக்கு ஏற்ற தேங்காய்ப்பால் சேர்த்த பூண்டு மீன் குழம்பு தாய்ப்பால் அதிகம் சுரக்க அடிக்கடி இதை உணவில் சேர்த்துக்கொள்ளவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • பாய்ளிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. நெத்திலி மீன் அரை கிலோ
  2. பூண்டு 100 கிராம்
  3. சின்ன வெங்காயம் 100 கிராம்
  4. தக்காளி-2
  5. கெட்டி தேங்காய்ப்பால் ஒரு கப்
  6. இரண்டாவதாக எடுத்த தண்ணீர் தேங்காய் பால் 2 கப்
  7. மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன்
  8. மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன்
  9. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  10. சீரகம் சோம்பு சேர்த்து அரைத்த தூள் ஒரு டீஸ்பூன்
  11. மல்லி தூள் அரை டீஸ்பூன்
  12. வெந்தயம் தாளிக்க
  13. கருவேப்பில்லை சிறிதளவு
  14. உப்பு தேவையான அளவு
  15. சமையல் எண்ணெய் 3மேசைகரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் நெத்திலி மீனை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் சூடானதும் வெந்தயம் கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்
  3. வெந்தயம் சிவந்தவுடன் பூண்டு சிறிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. எடுத்து வைத்துள்ள தண்ணீர் தேங்காய் பாலில் வைத்துள்ள அனைத்து மசாலாக்களையும் சேர்த்து கலக்கவும்
  5. வெங்காயம் பூண்டு சிவந்தவுடன் இந்த மசாலா கலவையை அதில் ஊற்றவும்
  6. குழம்பு 5 நிமிடம் கொதித்தவுடன் எடுத்து வைத்துள்ள மீனை சேர்க்கவும்
  7. மீன் வெந்தவுடன் எடுத்து வைத்துள்ள கெட்டி தேங்காய் பால் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்
  8. இது எங்க வீட்டு ஸ்பெஷல் மீன் குழம்பு எல்லோரும் ட்ரை பண்ணி பாருங்க

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்