வீடு / சமையல் குறிப்பு / புரோட்டின் ரிச் மினி லன்ச்

Photo of Protein rich mini lunch by Rachell Revathi Samuel at BetterButter
482
2
0.0(0)
0

புரோட்டின் ரிச் மினி லன்ச்

Aug-09-2018
Rachell Revathi Samuel
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
120 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புரோட்டின் ரிச் மினி லன்ச் செய்முறை பற்றி

புரத சத்து நிறைந்த மினி லன்ச். துவரம் பருப்பு சாதம், கொள்ளு சூப் கொள்ளு மசியல் , பச்சை பட்டாணி மற்றும் சோயா பீன்ஸ் கூட்டு , முட்டை கேக் மசாலா , கருவாடு வறுவல் மற்றும் முருங்கை காய் வடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ரோசஸ்டிங்
  • பிரெஷர் குக்
  • விஸ்கிங்
  • ப்லெண்டிங்
  • ஸ்டீமிங்
  • ஃபிரையிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பருப்பு சாதம்; துவரம் பருப்பு 1 கப்
  2. அரிசி 2கப்
  3. எண்ணெய் 3 ஸ்பூன்
  4. நெய் 5 ஸ்பூன்
  5. பட்டை
  6. கிராம்பு
  7. கடுகு உளுத்தம்பருப்பு 1/2 ஸ்பூன்
  8. கடலை பருப்பு 2 ஸ்பூன்
  9. பெருங்காயம் சிறிது
  10. பெரிய வெங்காயம் 3
  11. வெள்ளை பூண்டு 10-15 பல்
  12. இஞ்சி 1 துண்டு
  13. பச்சை மிளகாய் 3
  14. மிளகாய் வற்றல் 2
  15. கருவேப்பிலை சிறிது
  16. தக்காளி 3
  17. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  18. சாம்பார் பொடி 2 ஸ்பூன் (தேவைப்பட்டால்)
  19. உப்பு தேவையான அளவு
  20. கொத்தமல்லி தழை சிறிது
  21. கொள்ளு சூப் மற்றும் கொள்ளு மசியல்: கொள்ளு 1/4 கப்
  22. எண்ணெய் 2 ஸ்பூன்
  23. கடுகு உளுத்தம்பருப்பு 1/2 ஸ்பூன்
  24. கொத்தமல்லி விதை 1 ஸ்பூன்
  25. வெங்காயம் 1
  26. பூண்டு 3
  27. கருவேப்பிலை சிறிது
  28. பச்சை மிளகாய் 2
  29. உப்பு தேவையான அளவு
  30. மிளகு சீரகத்தூள் 1 ஸ்பூன்
  31. பட்டாணி சோயா பீன்ஸ் கூட்டு: பச்சை பட்டாணி 1/2 கப்
  32. சோயா பீன்ஸ் 1/4 கப்
  33. எண்ணெய் 2 ஸ்பூன்
  34. கடுகு உளுத்தம்பருப்பு 1 ஸ்பூன்
  35. வெங்காயம் 1
  36. கருவேப்பிலை சிறிது
  37. தேங்காய் 2 துண்டு
  38. மிளகு 1/2 ஸ்பூன்
  39. சீரகம் 1/2 ஸ்பூன்
  40. சோம்பு 1/2 ஸ்பூன்
  41. பூண்டு 2 பல்
  42. இஞ்சி 1 துண்டு
  43. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  44. மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
  45. கரம் மசாலா 1 ஸ்பூன்
  46. உப்பு தேவையான அளவு
  47. முட்டை கேக் மசாலா: முட்டை 2
  48. மிளகு சீரகத்தூள் 1 ஸ்பூன்
  49. எண்ணெய் 2 ஸ்பூன்
  50. கடுகு உளுத்தம்பருப்பு 1/2 ஸ்பூன்
  51. வெங்காயம் 1
  52. கருவேப்பிலை சிறிது
  53. இஞ்சி 1 துண்டு
  54. பூண்டு 3 பல்
  55. தக்காளி 1
  56. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  57. மல்லித்தூள் 1 ஸ்பூன்
  58. கரம் மசாலா 1 ஸ்பூன்
  59. உப்பு தேவையான அளவு
  60. கருவாடு வறுவல்: துண்டு கருவாடு 6 துண்டுகள்
  61. எண்ணெய் 3 ஸ்பூன்
  62. வெங்காயம் 1
  63. கருவேப்பிலை சிறிது
  64. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  65. முருங்கைக்காய் வடை: முருங்கைக்காய் 1
  66. பொரிகடலை மாவு 6-7 ஸ்பூன்
  67. வெங்காயம் 2
  68. பச்சை மிளகாய் 2
  69. இஞ்சி 1 துண்டு
  70. சோம்பு தூள் 1 ஸ்பூன்
  71. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பருப்பு சாதம்: அரிசி மற்றும் பருப்பை தண்ணீர் 20 நிமிடம் ஊற வைக்கவும்.
  2. அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு சேர்த்து பின் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.வெங்காயம் கருவேப்பிலை பச்சை மிளகாய் பூண்டு பெருங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  3. வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ளவும்.உப்பு சேர்க்கவும். தேவைப்பட்டால் சாம்பார் பொடி சேர்த்துக் கொள்ளவும்.தண்ணீர் 5 கப் சேர்க்கவும்.
  5. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் ஊற வைத்த அரிசி மற்றும் பருப்பை சேர்க்கவும்.தேவைப்பட்டால் உப்பு சேர்த்து கொள்ளவும்
  6. குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கவும்..
  7. கேஸ் ரிலீஸ் ஆனதும் நெய் 1 ஸ்பூன் ஊற்றி கிளறி விடவும்.கொத்தமல்லி தழை தூவி விடவும்.புரதம் மிகுந்த பருப்பு சாதம் தயார்.
  8. கொள்ளு சூப்: கொள்ளை குக்கரில் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.வேக வைத்த தண்ணீரை பிரித்து எடுக்கவும்.அதில் மிளகு சீரகத்தூள் தூவி பரிமாறவும்.சுவையான கொள்ளு சூப் தயார்.
  9. கொள்ளு மசியல்: வேகவைத்த கொள்ளை எடுத்துக் கொள்ளவும்.
  10. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கொத்தமல்லி விதை சேர்த்து தாளிக்கவும்.
  11. வெங்காயம் கருவேப்பிலை பச்சை மிளகாய் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
  12. வெங்காயம் வதங்கியதும் வேகவைத்த கொள்ளை சேர்க்கவும்.சில நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.
  13. வதங்கியதும் அடுப்பில் இருந்து இறக்கி பருப்பு மத்தை வைத்து நன்றாக மசிக்கவும்.
  14. நன்றாக மசித்து கொள்ளவும்
  15. கொள்ளு மசியல் தயார்
  16. பச்சை பட்டாணி சோயா பீன்ஸ் கூட்டு: பச்சை பட்டாணி மற்றும் சோயா பீன்ஸை உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.
  17. மிக்ஸியில் தேங்காய் இஞ்சி பூண்டு சீரகம் சோம்பு மிளகு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  18. சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  19. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து பின் வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  20. வேகவைத்த பச்சை பட்டாணி மற்றும் சோயா பீன்ஸை சேர்க்கவும்.
  21. அரைத்த மசாலாவை சேர்க்கவும்.
  22. நன்றாக கிளறவும்.
  23. மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் கரம் மசாலா சேர்த்து கிளறவும்.தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
  24. தண்ணீர் வற்றும் வரை வேகவிடவும்.
  25. சுவையான பச்சை பட்டாணி மற்றும் சோயா பீன்ஸ் கூட்டு தயார்.
  26. முட்டை கேக் மசாலா: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி அதில் முட்டையை உடைத்து ஊற்றவும்.
  27. மிளகு சீரகத்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
  28. நன்றாக கலந்து கொள்ளவும்.
  29. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி அதின் மேல் முட்டை உள்ள பாத்திரத்தை மூடி வைக்கவும்.
  30. அந்த பாத்திரத்தையும் மூடி 10 நிமிடம் முட்டையை வேக வைக்கவும்.
  31. முட்டை வெந்ததும் அதை எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  32. முட்டை கேக் துண்டுகள்
  33. மிக்ஸியில் தக்காளி இஞ்சி பூண்டு போட்டு அரைத்துக் கொள்ளவும்
  34. அரைத்த தக்காளி
  35. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
  36. மிளகாய்த்தூள் மல்லித்தூள் சேர்க்கவும்.
  37. அரைத்த தக்காளி சேர்த்து நன்றாக கிளறவும்.
  38. கரம் மசாலா தூள் சேர்த்து கிளறவும்.
  39. வெட்டி வைத்த முட்டை கேக் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறவும்.
  40. தண்ணீர் வற்றும் வரை சில நிமிடங்கள் வேகவிடவும்.
  41. மிளகு சீரகத்தூள் தூவி இறக்கவும்.
  42. சுவையான முட்டை கேக் மசாலா தயார்.
  43. கருவாடு வறுவல்: அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கருவாடு துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
  44. சில நிமிடங்கள் வதக்கிய பின் வெங்காயம் கருவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  45. நன்றாக வதங்கியதும் சிறிது எண்ணெய் ஊற்றி மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
  46. நன்றாக சுருள வதங்கியதும் இறக்கவும்.
  47. சுவையான கருவாடு வறுவல் தயார்.
  48. முருங்கைக்காய் வடை: முருங்கைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.
  49. முருங்கைக்காயில் உள்ள சதைப் பகுதியை கத்தியை வைத்து தனியாக எடுக்கவும்.
  50. முருங்கைக்காயில் பிரித்த சதைப் பகுதி
  51. பிரித்த முருங்கைக்காயுடன் வெங்காயம் இஞ்சி பச்சை மிளகாய் மற்றும் சோம்பு தூள் சேர்க்கவும்.
  52. அதனுடன் பொரிகடலை மாவு சேர்க்கவும்.
  53. நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  54. சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  55. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உருண்டைகளை தட்டி வடையாக 2 புறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  56. சுவையான முருங்கைக்காய் வடை தயார்.
  57. சுவையான மினி புரோட்டின் ரிச் லன்ச் தயார்.
  58. தட்டில் வைத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்