வீடு / சமையல் குறிப்பு / கோழிக்கறி தொக்கு.

Photo of Simple Chicken thokku. by Rabia Alaudeen at BetterButter
373
1
0.0(0)
0

கோழிக்கறி தொக்கு.

Aug-09-2018
Rabia Alaudeen
300 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோழிக்கறி தொக்கு. செய்முறை பற்றி

உடனடியாக செய்யக்கூடிய எளிமையான சிக்கன் தொக்கு. பூரி, சப்பாத்தி, தோசை, தயிர் சாதம் போன்ற உணவுகளுடன் சாப்பிட உகந்தது.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோழிக்கறி நெஞ்சுபகுதி 1/4 கிலோ
  2. பெரிய வெங்காயம் 2
  3. தக்காளி 3
  4. இஞ்சி பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
  5. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  6. பச்சை மிளகாய் 1
  7. உப்பு சுவைக்கேற்ப
  8. பட்டை 1
  9. கிராம்பு 2
  10. ஏலக்காய் 2
  11. எண்ணெய் 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கோழிக்கறியை நன்றாக சுத்தம் செய்து மிக்ஸியில் போட்டு கொத்துகறி தயார் செய்யவும்.
  2. வெங்காயம் மற்றும் தக்காளியை நன்றாக சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும்.
  3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் பட்டை , கிராம்பு , ஏலக்காய், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. பின்பு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும், பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  6. இஞ்சி பூண்டு நன்றாக வதங்கியதும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
  7. பின்பு கொத்துகறியை வதக்கிய மசாலாவோடு சேர்த்து அதனுடன் சிறிது உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும்.
  8. கொத்துகறி நன்கு வெந்து, தண்ணீர் வற்றி எண்ணெய் பிரிந்து வரும் பொழுது அடுப்பை அணைத்து, சிறிது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்