வீடு / சமையல் குறிப்பு / புரதச்சத்துகள் நிறைந்த சத்து மாவு சப்பாத்தியும் டபுள்பீன்ஸ் குருமாவும்

Photo of Rich protein Health mix chapati and double beans kuruma by jeyaveni chinniah at BetterButter
0
5
0(0)
0

புரதச்சத்துகள் நிறைந்த சத்து மாவு சப்பாத்தியும் டபுள்பீன்ஸ் குருமாவும்

Aug-10-2018
jeyaveni chinniah
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

புரதச்சத்துகள் நிறைந்த சத்து மாவு சப்பாத்தியும் டபுள்பீன்ஸ் குருமாவும் செய்முறை பற்றி

ஒரு வேளை உணவில் அனைத்து சிறு தானியங்களில் உள்ள புரோட்டீன்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ண வைக்கலாம்

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • తేలికైనవి
 • తమిళనాడు
 • ప్రధాన వంటకం
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

 1. சத்து மாவு-1 கப்
 2. கோதுமை மாவு-2 கப்
 3. பால்-1 கப்
 4. வெண்ணெய் தேவையான அளவு
 5. டபுள் பீன்ஸ்-100கி
 6. வெங்காயம்-1
 7. தக்காளி-1
 8. இஞ்சி பூண்டு விழுது-1ஸ்பூன்
 9. மஞ்சள் தூள்-1/2 ஸ்பூன்
 10. மல்லி தூள்-2 ஸ்பூன்
 11. மிளகாய்த்தூள்-1 ஸ்பூன்
 12. பெருஞ்சீரகம், கிராம்பு ,ஏலக்காய்
 13. ஜாதிபத்திரி, பட்டை, அண்ணாசி பூ
 14. முந்திரி பருப்பு-4
 15. கசகசா-1ஸ்பூன்
 16. தேங்காய்-2 துண்டு
 17. கஸ்தூரி மேதி
 18. கறிவேப்பிலை
 19. உப்பு தேவையான அளவு
 20. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

 1. ஒரு பாத்திரத்தில் சத்துமாவு மற்றும் கோதுமை மாவு, உப்பு ஆகியவற்றை எடுத்து கொள்ளவும்
 2. காய்ச்சிய பால் மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
 3. இதனை 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்
 4. பின்னர் வேண்டிய அளவில் சப்பாத்தியாக தட்டி கொள்ளவும்
 5. தோசை கல்லில் வெண்ணெய் அல்லது எண்ணெய் தடவி சுட்டு எடுக்கவும்
 6. டபுள் பீன்ஸ் குருமா செய்முறை:
 7. டபுள் பீன்ஸை இரவு முழுவதும் ஊறவைத்து கொள்ளவும்
 8. நன்றாக கழுவி , டபுள்பீன்ஸ் மற்றும் சிறிது உப்பு சேர்த்து குக்கரில் 7 விசில் விடவும்
 9. வாணலியில் எண்ணெய் விட்டு நன்றாக காய்ந்ததும் பட்டை, கிராம்பு ,ஏலக்காய் ,அண்ணாசி பூ ,ஜாதிபத்திரி , கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்
 10. வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
 11. பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்
 12. உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மல்லி தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்
 13. தக்காளி சேர்த்து நன்றாக வேகும் வரை வதக்கி
 14. டபுள் பீன்ஸை வேக வைத்த தண்ணீருடன் சேர்த்து வாணலியில் போடவும்
 15. வாணலியை மூடி கொதிக்க விடவும்
 16. தேங்காய், பெருஞ்சீரகம், முந்திரி பருப்பு, கசகசா ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்
 17. தேங்காய் விழுதை வாணலியில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
 18. தண்ணீர் ஓரளவு வற்றியதும் கஸ்தூரி மேதி சேர்த்து நன்றாக கிளறவும்
 19. சத்தான சுவையான குருமாவை சிறுதானிய சப்பாத்தியுடன் சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்