வீடு / சமையல் குறிப்பு / சோயாபீன்ஸ் பன்னீர் புலாவ்

Photo of Soyabeans Paneer Pulao by Sowmya Sundar at BetterButter
315
1
0.0(0)
0

சோயாபீன்ஸ் பன்னீர் புலாவ்

Aug-10-2018
Sowmya Sundar
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சோயாபீன்ஸ் பன்னீர் புலாவ் செய்முறை பற்றி

சோயா பீன்ஸ் மற்றும் பன்னீர் சேர்த்து செய்த புரதம் நிறைந்த புலாவ்.பன்னீர் மற்றும் சோயா பீன்ஸில் அதிகளவில் புரதச்சத்து இருக்கிறது.குழந்தைகளின் லன்ச் பாக்சிற்கு ஏற்ற அதிக காரமில்லாத சத்தான உணவு இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • இந்திய
  • பிரெஷர் குக்
  • ப்லெண்டிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சோயாபீன்ஸ்-1/2 கப்
  2. பன்னீர் துண்டுகள் - 1/2 கப்
  3. பெரிய வெங்காயம்-1 நறுக்கியது
  4. பீன்ஸ்-6
  5. காரட்-1 நறுக்கியது
  6. குடைமிளகாய்-1 நறுக்கியது
  7. பாஸ்மதி அரிசி-1 கப்
  8. தண்ணீர்-1 1/2 கப்
  9. உப்பு தேவையான அளவு
  10. இஞ்சி -1 துண்டு
  11. பூண்டு-4 பல்
  12. பச்சை மிளகாய்-1 அல்லது 2
  13. நெய்-1 டேபிள் ஸ்பூன்
  14. சீரகம்-1 டீஸ்பூன்
  15. மஞ்சள் தூள்-1/4 டீஸ்பூன்
  16. பட்டை,கிராம்பு,ஏலக்காய்- தலா 2
  17. பிரிஞ்சி இலை-1
  18. எலுமிச்சை சாறு-1/2 டீஸ்பூன்
  19. கொத்தமல்லி தழை சிறிது

வழிமுறைகள்

  1. சோயா பீன்ஸை களைந்து தண்ணீர் விட்டு எட்டு மணி நேரம் ஊற வைக்கவும்.பின்னர் குக்கரில் தண்ணீருடன் சிறிது உப்பு சேர்த்து ஒரு விசில் வரை வேக வைத்து வடிகட்டி கொள்ளவும். ஒரு விசில் போதும் ஏனெனில் மறுபடியும் அரிசியுடன் வேக வைக்க போகிறோம்.
  2. பாஸ்மதி அரிசியை களைந்து விட்டு வடிகட்டி பதினைந்து நிமிடங்கள் ஊற வைக்கவும்
  3. இஞ்சி பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  4. கடாயில் நெய் விட்டு சீரகம், பட்டை,கிராம்பு ஏலக்காய் மற்றும் பிரிஞ்சி இலை தாளித்து நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும். பின் அதனுடன் பீன்ஸ், காரட் , குடைமிளகாய் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்
  5. அதனுடன் வேக வைத்த சோயா பீன்ஸ் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
  6. பின் ஊற வைத்த அரிசி மற்றும் பன்னீர் துண்டுகள் சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் விட்டு குக்கரை மூடி மிதமான தீயில் இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்
  7. எலுமிச்சை சாறு கலந்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்