வீடு / சமையல் குறிப்பு / ராஜ்மா கிரேவி

Photo of Rajma gravy by Meena Maheswaran at BetterButter
370
0
0.0(0)
0

ராஜ்மா கிரேவி

Aug-10-2018
Meena Maheswaran
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ராஜ்மா கிரேவி செய்முறை பற்றி

Protein

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ராஜ்மா ஒரு மீடியம் சைஸ் டம்ளர்
  2. தேங்காய் அரை மூடி
  3. சின்ன வெங்காயம் 15
  4. தக்காளி-2
  5. சோம்பு ஒரு டேபிள் ஸ்பூன்
  6. பட்டை சிறிய துண்டு
  7. அன்னாசி பூ 1
  8. ஏலக்காய் ஒன்று
  9. பிரியாணி இலை ஒன்று
  10. கருவேப்பிலை சிறிதளவு
  11. கொத்தமல்லி சிறிதளவு
  12. பூண்டு 6 பல்
  13. இஞ்சி அரை இன்ச்
  14. இந்துப்பு தேவையான அளவு
  15. முந்திரிபருப்பு 5

வழிமுறைகள்

  1. ராஜ்மாவை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்
  2. குக்கரில் ராஜ்மாவை 3 விசில் வேக விடவும்
  3. வேக வைத்த தண்ணீரை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்
  4. குக்கரில் எண்ணெய் ஊற்றி சோம்பு பட்டை கிராம்பு கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்
  5. ஏலக்காய் பிரியாணி இலை வெங்காயம் தாளிக்கவும்
  6. இஞ்சி பூண்டை உரலில் இடித்து தாளிக்கவும்
  7. தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  8. தேங்காயுடன் முந்திரி பருப்பு சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்
  9. ராஜ்மா மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
  10. வேகவைத்த தண்ணீர் தேங்காய் விழுது உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
  11. பின்பு குக்கரை மூடி 4 விசில் வைத்து இறக்கவும் கொத்தமல்லி தூவி பரிமாறவும் சுவையான ராஜ்மா கிரேவி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்