வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் வெள்ளை புலாவ்

Photo of Chicken white pulao by hajirasheed haroon at BetterButter
378
1
0.0(0)
0

சிக்கன் வெள்ளை புலாவ்

Aug-10-2018
hajirasheed haroon
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் வெள்ளை புலாவ் செய்முறை பற்றி

சிக்கன் பாஸ்மதி அரிசி இஞ்சி பூண்டு விழுது புதினா கொத்தமல்லி பச்சை மிளகாய் சேர்த்து செய்துள்ளது ஆரோக்கியமானது

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் அரை கிலோ
  2. பாஸ்மதி அரிசி அரை கிலோ
  3. இஞ்சி பூண்டு விழுது 5 டீஸ்பூன்
  4. பட்ச்சை மிளகாய் 5
  5. புதினா மல்லி இலை ஒரு கப்
  6. அதற்கு பட்டை ஏலக்காய் கிராம்பு பிரிஞ்சி இலை
  7. நெய் 3 ஸ்பூன்
  8. தயிர் ஒரு கப்
  9. வெங்காயம் ஐந்து
  10. தக்காளி-3
  11. உப்பு தேவையான அளவு
  12. எண்ணெய் 7 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சிக்கனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும் வெங்காயம் தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. பாஸ்மதி அரிசியை முக்கால் பாகம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை ஏலக்காய் பிரிஞ்சி இலை சேர்த்து பொரியவிடவும் பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் வெங்காயம் வதங்கியவுடன் சிக்கன் இஞ்சி பூண்டு விழுது தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  4. புதினா மல்லி இலை சேர்த்து வதக்கிய பின் தயிர் உப்பு சேர்க்கவும்
  5. சிக்கன் முக்கால் பாகம் வெந்தவுடன் வேகவைத்த பாசுமதி அரிசியை சேர்த்து நெய் ஊற்றி தம்மில் 20 நிமிடம் வைக்கவும்
  6. மீதியுள்ள புதினா இலை சேர்த்து பரிமாறலாம்
  7. சுவையான சிக்கன் புலாவ் தயார் காரம் இல்லாமல் இருப்பதால் குழந்தைகள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள்
  8. சிக்கன் கிரேவி மட்டன் கிரேவியுடன் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்