வீடு / சமையல் குறிப்பு / கருப்பு உளுந்து காரச்சட்னி

Photo of black gram chutney by Subha Sri at BetterButter
329
1
0.0(0)
0

கருப்பு உளுந்து காரச்சட்னி

Aug-10-2018
Subha Sri
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கருப்பு உளுந்து காரச்சட்னி செய்முறை பற்றி

இந்த காரச்சட்னி புரதம் நிறைந்தது மட்டுமல்லாமல் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு எலும்பு வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொண்டுள்ளது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கருப்பு உளுந்து ஒரு கப்
  2. நறுக்கிய தேங்காய் கால் கப்
  3. மிளகாய்வற்றல் 4 அல்லது 5
  4. புளி எலுமிச்சை அளவு
  5. கறிவேப்பிலை சிறிதளவு
  6. எண்ணெய் 2 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி கருப்பு உளுந்தை நன்கு சிவக்க வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்
  2. பின் அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாய் வற்றல் கறிவேப்பிலையை வதக்கவும் பிறகு நறுக்கிய தேங்காய் கொத்தமல்லி புளி ஆகியவற்றை நன்கு வதக்கவும்
  3. இவை அனைத்தையும் மிக்ஸியில் இட்டு தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்
  4. அரைத்தவற்றை ஒரு பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளவும். சுவையான புரதம் நிறைந்த கருப்பு உளுந்து கார சட்னி தயார்.
  5. இதனை இட்லி அல்லது தோசையுடன் சேர்த்து பரிமாற சுவையாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்