வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபுள் சீஸ் ஆம்லெட்

Photo of Vegetable Cheese Omelet by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
303
4
5.0(0)
0

வெஜிடபுள் சீஸ் ஆம்லெட்

Aug-10-2018
Wajithajasmine Raja mohamed sait
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபுள் சீஸ் ஆம்லெட் செய்முறை பற்றி

வெஜிடபுள் சீஸ் ஆம்லெட்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டை - 2
  2. குடைமிளகாய் - 1/4 பொடியாக நறுக்கியது
  3. காளான் - 3 பொடியாக நறுக்கியது
  4. வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
  5. தக்காளி - 1 பொடியாக நறிக்கியது
  6. சீஸ் - 1-2 துண்டு
  7. பச்சை மிளகாய் - 1 பொடியாக நறுக்கியது
  8. மிளகு தூள் - சிறிதளவு
  9. சீரகத்தூள் - சிறிதளவு
  10. உப்பு - தேவையா அளவு
  11. எண்ணெய் - தேவையானஅளவு

வழிமுறைகள்

  1. அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம்,குடைமிளகாய்,காளான், தக்காளி , பச்சை மிளகாய் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி வைக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் இரண்டு முட்டை , சிறிதளவு மிளகு தூள், சீரகத்தூள் , தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு அடித்து வைத்துக்கொள்ளவும் .
  3. தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அடித்து வைத்துள்ள முட்டையை சேர்த்து அதன்மேல் வதக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்க்கவும்.
  4. பின்பு அதன்மேல் சீஸ் துண்டு வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி நன்கு வேகவிடவும்.
  5. முட்டை நன்கு வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும்.
  6. சுவையான ஆரோக்கியமான வெஜிடபுள் சீஸ் ஆம்லெட் தயார். காலை உணவிற்கு இதனை எடுத்துக்கொள்ளலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்