வீடு / சமையல் குறிப்பு / இட்லி பர்கர்

Photo of Idli burger by Sumaiya Arafath at BetterButter
364
1
0.0(0)
0

இட்லி பர்கர்

Aug-11-2018
Sumaiya Arafath
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

இட்லி பர்கர் செய்முறை பற்றி

பன்னிர்க்கு பதில் இட்லியை பன்னாக உபயோகித்திருக்கிறோம்.அதிக சத்தும் அடங்கியுள்ளது.குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • ஃப்யூஷன்
  • ஷாலோ ஃபிரை
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. இட்லி 6
  2. கோழி இறைச்சி நெஞ்சும்பகுதி 250கிராம்
  3. வெங்காயம் சிறியது 1
  4. மிளகு தூள் 1 மே.க
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. பிரட் துண்டு 1
  7. மைதா கலவை(மைதா மாவை தண்ணீரில் குழைத்து வைக்கவும்)
  8. ரொட்டி பொடி
  9. தக்காளி சாஸ்
  10. சீஸ்
  11. மயோநைஸ்
  12. வட்டமாக வெட்டிய வெங்காயம்,தக்காளி
  13. முட்டை 1

வழிமுறைகள்

  1. பர்கர் செய்முறை: கோழி இறைச்சி நன்றாக சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கவும். மிக்ஸியில் இறைச்சி துண்டுகள்,வெங்காயம்,பிரட்,மிளகு தூள்,உப்பு ,முட்டை சேர்த்து நன்றாக அடிக்கவும்.
  2. கையில் எண்ணை தடவி வட்ட வடிவில் தட்டி எடுக்கவும்.
  3. தோசை கல்லில் எண்ணை ஊற்றி இதை சுட்டு எடுக்கவும்.
  4. இட்லியை மைதா கலவையில் முக்கி ரொட்டி பொடியில் பிரட்டி பொரித்து எடுக்கவும்.
  5. பிறகு பொரித்த இட்லி மேல் தக்காளி சாஸ்,சீஸ் அல்லது மயோநைஸ் தடவி பர்கர் வைத்து,அதன் மேல் வட்டமாக வெட்டிய வெங்காயம்,தக்காளி வைக்கவும்
  6. அதன் மேல் இட்லியை வைக்கவும்.
  7. சுவையான இட்லி பர்கர் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்