வீடு / சமையல் குறிப்பு / கோப்ஃதா குழம்பு

Photo of Kofta gravy with meat balls by Nayeemu Nisha at BetterButter
539
1
0.0(0)
0

கோப்ஃதா குழம்பு

Aug-11-2018
Nayeemu Nisha
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோப்ஃதா குழம்பு செய்முறை பற்றி

Meat balls using pottu kadalai(Roasted Gram)

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • கர்நாடகா
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மட்டன் 250 கிராம் எலும்பு இல்லாத நிலையில்
  2. வெங்காயம் 2
  3. தக்காளி 1
  4. தேங்காய் அரை மூடி
  5. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  6. பொட்டு கடலை 250 கிராம்
  7. லவங்கம் 2
  8. பட்டை 2
  9. ஏலக்காய் 2
  10. மஞ்சள் தூள் சிறிது அளவு
  11. மிளகாய் தூள் 2 டீஸ்பூன்
  12. தனியா தூள் 3 டீஸ்பூன்
  13. ப.மிளகாய் 2
  14. கொத்த மல்லி சிறிது

வழிமுறைகள்

  1. மிக்ஸியில் பொட்டு கடலை பொடியாக அரைத்து எடுக்கவும்
  2. பின்பு அத்துடன் கறி இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன் ஒரு பட்டை கிராம்பு ஏலக்காய் கால் மூடி தேங்காய் சிறிது மஞ்சள் தூள் போட்டு நன்றாக அரைத்து எடுக்கவும்.
  3. சிறிது அளவு தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்கவும்
  4. கையில் சிறிது தண்ணீர் தொட்டு உருண்டை பிடிக்கவும்
  5. குழம்பிற்காக மிக்ஸியில் வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து மையாக அரைத்து எடுக்கவும்
  6. கடாயில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  7. பின்பு மஞ்சள் தூள் சிறிது அளவு தனியா தூள் மிளகாய் தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்
  8. மீதி தேங்காய் அரைத்து சேர்த்து வதக்கவும்
  9. அரை கப் தண்ணீர் சேர்த்து அடுப்பு சிம் வைத்து உருண்டை போடவும். கோத்தமல்லி நறுக்கி போடவும்
  10. பத்து நிமிடம் கழித்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்