வீடு / சமையல் குறிப்பு / சென்னா தகி மசாலா

Photo of Channa dagi masala by Krishnasamy Vidya Valli at BetterButter
494
0
0.0(0)
0

சென்னா தகி மசாலா

Aug-11-2018
Krishnasamy Vidya Valli
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சென்னா தகி மசாலா செய்முறை பற்றி

எப்போதும் ஆலு சென்னா மசாலா தான் செய்கிறோம். வித்யாசமான இந்த தகி மசாலா செய்து பாருங்கள். மைல்டான சைட்டிஷ் இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஃப்யூஷன்
  • ஸ்டிர் ஃபிரை
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கருப்பு கொண்டகடலை 1/4 கப்
  2. தயிர் 1/2 கப்
  3. வெங்காயம் 1
  4. தக்காளி 1
  5. உப்பு 1/2 தேக்கரண்டி
  6. காஷ்மீர் சில்லி பவுடர் -1/2 தேக்கரண்டி
  7. கடலைமாவு -2 தேக்கரண்டி
  8. மஞ்சள் பொடி, தனியா பொடி, கரம் மசாலா தலா 1/4 தேக்கரண்டி
  9. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது -1/2 தேக்கரண்டி
  10. கஸூரி மேத்தி -1/2 தேக்கரண்டி
  11. தாளிக்க
  12. எண்ணெய் -1/2 தேக்கரண்டி
  13. சீரகம் -1/2 தேக்கரண்டி
  14. இஞ்சி பூண்டு பேஸ்ட் -1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கொண்டைக்கடலையை 2 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் தயிர் உப்பு கடலை மாவு மற்றும் எல்லா பொடிகளையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
  3. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. வேக வைத்த கொண்டைக்கடலையை சேர்க்கவும்
  5. தக்காளி சேர்த்து வதக்கவும்
  6. செய்து வைத்த தயிர் கலவையை சேர்த்து ஒரு கொதி விடவும்
  7. கசூரி மேத்தி மற்றும் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்