வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் பர்தா பிரியாணி

Photo of Chicken Parda Biryani by Hameed Nooh at BetterButter
517
6
0.0(0)
0

சிக்கன் பர்தா பிரியாணி

Aug-11-2018
Hameed Nooh
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் பர்தா பிரியாணி செய்முறை பற்றி

சுவையான சிக்கன் மற்றும் நட்ஸ் பிரியாணி செய்து அதனை கேக் போன்று சமைக்கும் ஒரு புதிய முறை. விருந்தாளிகளை இவ்வாறு புதுமையாக செய்து அசத்தலாம். சிக்கன் மற்றும் நட்ஸ் சேர்ந்து இருப்பதால் புரத சத்தும் மிகுதியாக உள்ள பதார்த்தமாகும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • ஹைதராபாத்
  • ஃபிரையிங்
  • ஸாட்டிங்
  • பேசிக் ரெசிப்பி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாஸ்மதி அரிசி 2 கப்
  2. சிக்கன் அரை கிலோ
  3. வெங்காயம் நான்கு
  4. தக்காளி-3
  5. நெய் 6 மேசைக்கரண்டி
  6. தயிர் ஒரு கப்
  7. இஞ்சி பூண்டு விழுது இரண்டு மேசைக்கரண்டி
  8. பச்சை மிளகாய் மூன்று
  9. சீரகம் ஒரு தேக்கரண்டி
  10. பட்டை ஒரு சிறிய துண்டு
  11. கிராம்பு-2
  12. பிரியாணி இலை ஒன்று
  13. மல்லி புதினா ஒரு கப்
  14. மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி
  15. மிளகாய் தூள் ஒரு மேசைக்கரண்டி
  16. உப்பு தேவைக்கு
  17. பர்தா பிரியாணி செய்வதற்கு
  18. கோதுமை மாவு ஒரு கப்
  19. மைதா அரை கப்
  20. பால் 4 மேஜைக்கரண்டி
  21. நெய் 2 மேசைக்கரண்டி
  22. பேக்கிங் பவுடர் அரை தேக்கரண்டி
  23. எண்ணெய் 2 மேசைக்கரண்டி
  24. உப்பு சுவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்
  2. வெங்காயத்தை பொன்னிறமாக பொரித்து ஆறியதும் அதில் பாதி அளவை அரைத்துக் கொள்ளவும்
  3. பிறகு சிக்கனை சுத்தப்படுத்தி அரைத்த வெங்காயம் தயிர் இஞ்சி பூண்டு விழுது உப்பு மற்றும் நறுக்கிய தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
  4. கடாயில் சிறிது நெய் ஊற்றி அதில் நட்ஸ் மட்டும் டிரைஃப்ரூட்ஸ் வறுத்து எடுக்கவும்
  5. அதே கடாயில் மேலும் 2 மேசைக்கரண்டி நெய் ஊற்றி அதில் சீரகம் பட்டை கிராம்பு பிரியாணி இலை ஏலம் போட்டு வறுக்கவும்
  6. பிறகு ஊற வைத்த சிக்கன் கலவையை போட்டு வேக விடவும்
  7. சற்று வெந்ததும் நறுக்கிய மல்லி புதினா இலை சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வேக விடவும்
  8. அடுத்து மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாக கிளறி அரை கப் தண்ணீர் ஊற்றி சிக்கனை வேக விடவும்
  9. பிறகு ஒரு பேனில் ஒரு மேஜைக்கரண்டி நெய் விட்டு பாசுமதி அரிசியை வறுத்து 3 கப் தண்ணீர் விட்டு வேக விடவும்
  10. அரிசி முக்கால் பாகம் வெந்ததும் பொறித்த வெங்காயம் நட்ஸ் சேர்த்து இடையிடையே சிக்கன் மசாலாவையும் லேயராக வைத்து மேலும் 5 நிமிடங்கள் வேக வைக்கவும்
  11. இப்பொழுது சுவையான சிக்கன் மற்றும் ட்ரை ப்ரூட்ஸ் சேர்த்த பிரியாணி தயார்
  12. இனி பர்தா பிரியாணி செய்வதற்கு மாவுகளை சிறிது உப்பு சர்க்கரை நெய் பேக்கிங் சோடா பால் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக பிசையவும்
  13. பிறகு சப்பாத்தி கல்லில் மாவை சற்று கனமாக வளர்த்து எண்ணெய் தடவிய ஒரு பாத்திரத்தில் உள்ளே வைக்கவும்.
  14. பிரியாணியை உள்ளே பாத்திரத்தில் பரப்பி சுற்றி இருக்கக் கூடிய மாவை மெதுவாக இழுத்து வெடிப்புகள் இல்லாமல் மூடவும்.
  15. இனி பிரஷர் குக்கரில் விசில் மற்றும் கேஸ்கட்டை நீக்கி விட்டு அடியில் மணலை பரப்பி பாத்திரத்தை வைக்க ஒரு பலகை உள்ளே வைக்கவும்.
  16. அதன் மேல் பர்தா பிரியாணி பாத்திரத்தை வைத்து மூடி போட்டு 10 நிமிடங்கள் வேக விடவும்
  17. பத்து நிமிடங்கள் வெந்ததும் மூடியைத் திறந்து சிறிது நெய் அல்லது எண்ணெய்யை மாவின் மேலே தடவி மறுபடியும் 10 நிமிடங்கள் வேக விடவும்
  18. பிறகு மூடியைத் திறந்து ஐந்து நிமிடங்கள் ஆற விட்டு பாத்திரத்தை ஒரு தட்டில் கவிழ்த்தால் சுவையான சிக்கன் பிரியாணி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்