BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / கொண்டைகடலை பொரீட்டோ

Photo of Chickpeas Buritto by Sowmya Sundar at BetterButter
0
1
0(0)
0

கொண்டைகடலை பொரீட்டோ

Aug-11-2018
Sowmya Sundar
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கொண்டைகடலை பொரீட்டோ செய்முறை பற்றி

மெக்சிகன் நாட்டு உணவான பொரீட்டோவை(Buritto) நமது இந்திய பாணியில் சில மாற்றங்களுடன் செய்துள்ளேன்.கொண்டைகடலை ,காய்கறிகள்,சாதம் மற்றும் பன்னீர் ஸ்டஃப் செய்த புரதசத்து நிறைந்த முழுமையான உணவு இது.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • పెనం పై వేయించటం/పాన్ ఫ్రై
  • ప్రెజర్ కుక్
  • మితముగా వేయించుట
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஸ்டஃப்பிங் செய்ய:
  2. கொண்டைகடலை-1 கப்
  3. நறுக்கிய வெங்காயம்-1
  4. நறுக்கிய பீன்ஸ் ,காரட் ,குடைமிளகாய் சேர்த்து -1/4 கப்
  5. மஞ்சள் தூள்-1/4 டீஸ்பூன்
  6. மிளகாய் தூள்-1/2 டீஸ்பூன்
  7. மிளகு தூள்-1/2 டீஸ்பூன்
  8. மல்லி தூள்-1/2 டீஸ்பூன்
  9. ஆம்சூர் பொடி-1/2 டீஸ்பூன்
  10. கரம் மசாலா தூள்-1/2 டீஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு
  12. பன்னீர் துருவல்-1/2 கப்
  13. கடலை எண்ணெய்-1 டேபிள் ஸ்பூன்
  14. சீரகம்-1 டீஸ்பூன்
  15. கொத்தமல்லி தழை சிறிது
  16. சாதம்-1/2 கப்
  17. மிளகு தூள்-1/2 டீஸ்பூன்
  18. நெய்-1 டீஸ்பூன்
  19. டார்டியா(Tortilla) செய்ய
  20. கோதுமை மாவு-3/4 கப்
  21. மைதா மாவு-1/4 கப்
  22. எண்ணெய்-1 டேபிள் ஸ்பூன்
  23. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கொண்டைகடலையை தண்ணீர் விட்டு எட்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அதை குக்கரில் நன்றாக வேக வைத்து வடித்து கொள்ளவும்
  2. சாதத்துடன் அரை டீஸ்பூன் மிளகு தூள் மற்றும் நெய் சேர்த்து கலந்து தனியாக வைத்து கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து வெங்காயம் மற்றும் காய்கறிகள் சேர்த்து வதக்கவும்.
  4. அதனுடன் வேக வைத்த கொண்டைகடலை, மஞ்சள் தூள் மற்றும் எல்லா பொடி வகைகளும் சேர்த்து வதக்கவும்.வதங்கியதும் அடுப்பை அணைத்து விடவும்
  5. டார்டியா செய்ய : கோதுமை மாவு ,மைதா மாவு , உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  6. மாவை உருண்டைகளாக பிரித்து சப்பாத்தி போன்று தேய்த்து கொள்ளவும்
  7. தவாவை சூடுபடுத்தி டார்டியாவை போட்டு மேலே பிரவுன் கொப்புளங்கள் வரும் அளவிற்கு இரண்டு பக்கமும் வேக வைத்து கொள்ளவும்.இதே போல அனைத்தையும் செய்து கொள்ளவும்
  8. இப்போது எப்படி அரேன்ஜ் செய்வது என்று பார்ப்போம். முதலில் ஒரு டார்டியாவை தட்டில் வைத்து அதன் மேல் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு மிளகு சாதத்தை பரப்பவும்.
  9. அதன் மேல் கொண்டைகடலை மசாலாவை பரப்பவும். அதன் மேலே துருவிய பன்னீர் தூவி கொள்ளவும்
  10. அதன் மேல் கொத்தமல்லி தழை தூவி முதலில் அடிபக்கத்தை சுருட்டி பின்னர் இரண்டு சைடும் மடக்கி அப்படியே சுருட்டி கொள்ளவும்.
  11. இதே போல அனைத்து டார்டியாவையும் சுருட்டி கொண்டு கட் செய்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்