வீடு / சமையல் குறிப்பு / ஆரோக்கியமான மதிய உணவு

Photo of Healthy lunch by Surya Rajan at BetterButter
466
1
0.0(0)
0

ஆரோக்கியமான மதிய உணவு

Aug-11-2018
Surya Rajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஆரோக்கியமான மதிய உணவு செய்முறை பற்றி

மதிய உணவில் பருப்பு, காய்கறி கூட்டு, காய்கறி பொரியல், தயிர், நெய் ஆகியவற்றை சரியான விகிதத்தில் சேர்த்து சாப்பிடும்போது அது உடலுக்கு உறுதி தரும்...

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தாளிச்ச பருப்பு :
  2. துவரம் பருப்பு பருப்பு ஒரு கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  5. மிளகாய் தூள் அரை ஸ்பூன்
  6. சிறிய வெங்காயம் 2
  7. பச்சை மிளகாய் ஒன்று
  8. தக்காளி ஒன்று
  9. கடுகு அரை ஸ்பூன்
  10. சீரகம் அரை ஸ்பூன்
  11. தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன்
  12. கருவேப்பிலை சிறிதளவு
  13. பாசி பருப்பு பாயாசம் :
  14. பாசிப்பருப்பு ஒரு கப்
  15. வெல்லம் 3/4 கப்
  16. நெய் 3 ஸ்பூன்
  17. பால் தேவையான அளவு
  18. கிஸ்மிஸ் முந்திரி சிறிதளவு
  19. தேங்காய்த்துருவல் 3 ஸ்பூன்
  20. வெண்டைக்காய் பொரியல் :
  21. வெண்டைக்காய் 10
  22. உப்பு தேவையான அளவு
  23. வெங்காயம் ஒன்று
  24. எண்ணெய் ஒரு ஸ்பூன்
  25. மிளகாய் தூள் அரை ஸ்பூன்
  26. கடுகு அரை ஸ்பூன்
  27. கருவேப்பிலை சிறிதளவு
  28. தக்காளி தொக்கு :
  29. பழுத்த தக்காளி மூன்று
  30. உப்பு தேவையான அளவு
  31. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  32. தேங்காய் பால் 100ml
  33. கடுகு அரை ஸ்பூன்
  34. நல்லெண்ணெய் 4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. தாளிச்ச பருப்பு செய்வதற்கு : குக்கரில் பருப்புடன் மிளகாய், மஞ்சள் தூள் தக்காளி தேவையான தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் கறிவேப்பிலை மிளகாய் தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. பின் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி அதனுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. பாசிப்பருப்பு பாயாசம் செய்வதற்கு : பருப்பினை தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  5. பின் அதனுடன் வெல்லம் பால் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்
  6. கடாயில் நெய் ஊற்றி கிஸ்மிஸ் முந்திரி வறுத்து பாயசத்தில் சேர்க்கவும்
  7. வெண்டைக்காய் பொரியல் செய்வதற்கு : வெண்டைக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  8. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை வெங்காயம் தாளித்து பொடியாக நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும்
  9. பின் தேவையான உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து காய் நன்றாக வதங்கும் வரை வதக்கவும். தேவையெனில் சிறிதளவு தண்ணீர் தெளித்துக் கொள்ளவும்
  10. தக்காளி தொக்கு செய்வதற்கு : கடாயில் எண்ணெய் விட்டு கடுகு பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்
  11. 5 நிமிடம் கழித்து மிளகாய் தூள் தேவையான உப்பு சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்
  12. பின் அதனுடன் தேங்காய் பால் சேர்த்து நன்றாக வதங்கும் வரை 5 முதல் 10 நிமிடம் வரை மிதமான தீயில் வேக வைத்து இறக்கவும்
  13. தட்டில் அழகாக அடுக்கி சாதம் சப்பாத்தி தயிர் நெய்யுடன் தயார் செய்த கூட்டு பொறியல் பருப்பு பாயாசம் உடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்