வீடு / சமையல் குறிப்பு / வெங்காய பக்கோடா

Photo of Onion Pakoda by Jayasakthi Ekambaram at BetterButter
537
1
0.0(0)
0

வெங்காய பக்கோடா

Aug-11-2018
Jayasakthi Ekambaram
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெங்காய பக்கோடா செய்முறை பற்றி

கடலை மாவில் வெங்காயம் மசாலா கலந்து செய்யும் பக்கோடா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலை மாவு 150 கிராம்
  2. அரிசி மாவு 2 ஸ்பூன்
  3. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  4. கரம் மசாலா தூள் ஒரு ஸ்பூன்
  5. நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய வெங்காயம் 150 கிராம்
  6. சோம்புத்தூள் அரை ஸ்பூன்
  7. உப்பு தூள் தேவையான அளவு
  8. எண்ணெய் அரை லிட்டர்
  9. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஒன்று
  10. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை அரை கப்
  11. பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை அரை கப்

வழிமுறைகள்

  1. கடலை மாவையும் அரிசி மாவையும் உப்பு போட்டு நன்றாக பிசறிக் கொள்ளவும்
  2. அதில் நறுக்கிய வெங்காயம் நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்
  3. இரண்டு ஸ்பூன் எண்ணையை கொதிக்க வைத்து அதில் ஊற்றி கலந்து கொள்ளவும்
  4. லேசாக தண்ணீர் தெளித்து நன்றாக கலந்து கொள்ளவும்
  5. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி நன்றாக சூடு ஏற்றவும்
  6. எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து கடலை மாவை எடுத்து சிறிது சிறிதாக உதிர்த்து போட்டு வேக வைக்கவும்.
  7. நன்றாகப் புரட்டி போட்டு இரண்டு புறமும் சிவக்க வறுத்து எடுக்கவும்
  8. பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்