வீடு / சமையல் குறிப்பு / ஆட்டுக்கால் மொச்சை புளிக்குழம்பு

Photo of Goat leg motchai pulikulambu by hajirasheed haroon at BetterButter
203
3
0.0(0)
0

ஆட்டுக்கால் மொச்சை புளிக்குழம்பு

Aug-11-2018
hajirasheed haroon
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆட்டுக்கால் மொச்சை புளிக்குழம்பு செய்முறை பற்றி

மொச்சை ஆட்டுக்கால் செய்துள்ளது சூடான சாதம் தோசை சப்பாத்தி ஆகியவற்றுடன் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெட்டிய ஆட்டுக்கால் துண்டுகள் 10
  2. மொச்சை 100 கிராம்
  3. வெங்காயம்-2
  4. தக்காளி-2
  5. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  6. புளிக்கரைசல் ஒரு கப்
  7. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  8. மிளகாய்த்தூள் 2டீஸ்பூன்
  9. மல்லித்தூள் 3 ஸ்பூன்
  10. மல்லி இலை சிறிதளவு
  11. தாளிப்பதற்கு வெந்தயம் சீரகம்
  12. தேவையான அளவு எண்ணெய்
  13. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஆட்டுக்காலை வாங்கி சுத்தம் செய்து கழுவி கொள்ளவும் மொச்சையை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊற வைக்கவும்
  2. குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சீரகம் வெந்தயம் சேர்த்து பொரியவிடவும் பின்னர் நறுக்கிய வெங்காயம் ஆட்டுக்கால் துண்டுகள் இஞ்சி பூண்டு விழுது தக்காளி மஞ்சள்தூள் உப்பு சேர்த்து கிளறவும்
  3. வெங்காயம் தக்காளி வதங்கியவுடன் அதில் தண்ணீர் ஊற்றி 5 விசில் வேகவிடவும்
  4. ஆட்டுக்கால் முக்கால் பாகம் வெந்தவுடன் ஊறவைத்த மொச்சை பச்சை மிளகாய் தூள் மல்லி தூள் புளி சேர்த்து மீண்டும் 2 விசில் வேகவிடவும்
  5. விசில் வந்தவுடன் அடுப்பை ஆப் செய்யவும் மற்றொரு பாத்திரத்தில் ஊற்றி பரிமாறலாம்
  6. சுவையான சத்தான ஆட்டுக்கால் மொச்சை புளிக்குழம்பு தயார்
  7. இதில் நான் மொச்சை ஊற வைத்த நேரத்தை சேர்க்கவில்லை

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்