வீடு / சமையல் குறிப்பு / தால் பலூச்சி

Photo of Dal baluchi by Mughal Kitchen at BetterButter
2276
1
0.0(0)
0

தால் பலூச்சி

Aug-11-2018
Mughal Kitchen
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

தால் பலூச்சி செய்முறை பற்றி

By using black gram and rajma we can make this recipe.அசைவ உணவிற்கு நிகற் ஆன சத்து உள்ள ரெசிபி இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • உ.பி
  • பாய்ளிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. கருப்பு உளுந்தம் பயறு அரை கிலோ
  2. ராஜ்மா 100 கிராம்
  3. வெண்ணெய் அல்லது எண்ணெய் 75 கிராம்
  4. பிரஷ் க்ரீம் 100 கிராம்
  5. தயிர் 100 கிராம்
  6. கஸ்தூரி மேத்தி 1 மேஜைக்கரண்டி
  7. கரம் மசாலா தூள் ஒரு மேசைக்கரண்டி
  8. சீரகத் தூள் 2 தேக்கரண்டி
  9. மிளகாய்த் தூள் தேவைக்கு
  10. தக்காளி 100 கிராம்
  11. இஞ்சி பொடியாக நறுக்கியது இரண்டு மேசை கரண்டி
  12. பூண்டு பொடியாக நறுக்கியது இரண்டு மேசை கரண்டி
  13. பச்சை மிளகாய் மல்லி செடி தேவைக்கு
  14. மிளகாய் தூள் தேவைக்கு
  15. தாளிக்க சிறிது சீரகம் சிறிது கருவேப்பிலை
  16. மஞ்சள் தூள் சிறிது
  17. சீனி சிறிது

வழிமுறைகள்

  1. கருப்பு உளுந்தம் பயறு ராஜ்மா இரண்டையும் முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளவும்
  2. ராஜ்மா குறைந்தது பத்து மணி நேரமாவது ஊற வேண்டும்
  3. வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  4. இஞ்சி பூண்டு தக்காளி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  5. குக்கரில் தண்ணிர் உப்பு சேர்த்து ஊளுந்தம் பயறை ஏழு விசில் விட்டு அடுப்பை அணைக்கவும்
  6. ராஜ்மாவுடன் தண்ணிர் சேர்த்து எட்டு விசில் விட்டு அடுப்பை அணைக்கவும்
  7. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணையை சேர்க்கவும். சிரகம் பூண்டு சேர்க்கவும்
  8. பூண்டு பொன்னிறமான பின் வெங்காயம் சேர்க்கவும்
  9. வெங்காயம் வெந்த பின் இஞ்சி சேர்க்கவும்
  10. பின் தக்காளி பச்சை மிளகாய் சேர்க்கவும்
  11. பின் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் சீரகத் தூள் மஞ்சள் தூள் சேர்க்கவும்
  12. பின் தயிர் சேர்க்கவும்.பின் கஸ்தூரி மேத்தி சேர்க்கவும்.பின் உப்பு சேர்க்கவும்.பின் சீனி சுவைக்காக சிறிது
  13. மசாலாக்களில் சிறிது தண்ணீர் விட்டு நன்கு வேக வைத்த பின் பயறு வகைகளை சேர்க்கவும்
  14. குறைந்த தீயில் 10 நிமிடம் ஆன பின் பிரஷ் கிரீம் சேர்க்கவும்
  15. தால் பலூச்சிரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்