வீடு / சமையல் குறிப்பு / துவரம்பருப்பு புளி தோசை

Photo of Toor dal tamarind dosai by Krishnasamy Vidya Valli at BetterButter
362
1
0.0(0)
0

துவரம்பருப்பு புளி தோசை

Aug-11-2018
Krishnasamy Vidya Valli
65 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

துவரம்பருப்பு புளி தோசை செய்முறை பற்றி

துவரம் பருப்பு வைத்து செய்யும் இன்ஸ்டன்ட் தோசை இது. அதாவது புளிக்க வைக்க தேவையில்லை. அப்படியே வார்க்கலாம். ஒருவருக்கு மூன்று வீதம் ஐந்து பேர்களுக்கு கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. புழுங்கல் அரிசி ஒரு கப்
  2. துவரம் பருப்பு அரை கப்
  3. மிளகாய்வற்றல் 4 முதல் 6
  4. உப்பு ஒரு தேக்கரண்டி
  5. பெருங்காயம் கால் தேக்கரண்டி
  6. புளி ஒரு நெல்லிக்காய் அளவு(கெட்டியாக கரைத்து அரைக்கும்போது சேர்க்கவும்)
  7. தேங்காய்த்துருவல் 2 மேஜைக்கரண்டி
  8. கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது 2 தேக்கரண்டி
  9. தோசை வார்ப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. அரிசி பருப்பை ஒரு மணி நேரம் வரை ஊற வைக்கவும்
  2. மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து (கொத்தமல்லி இலை, எண்ணெய் தவிர)மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  3. கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. தோசைக்கல்லில் எண்ணெய் தடவி காய்ந்ததும் தோசை வார்த்து எடுக்கவும்
  5. சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்