வீடு / சமையல் குறிப்பு / கூனி முருங்கைக் கீரை கூட்டு

Photo of Baby prawn moringa leaf koottu by Benazer Abdul Kader at BetterButter
341
1
0.0(0)
0

கூனி முருங்கைக் கீரை கூட்டு

Aug-11-2018
Benazer Abdul Kader
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கூனி முருங்கைக் கீரை கூட்டு செய்முறை பற்றி

இறாலின் குஞ்சுகளான கூனி புரதச்சத்து நிறைந்தது. இதனுடன் முருங்கை கீரை சேர்த்து கூட்டு வைத்தால் அதில் நமக்கு ஏராளமான சத்துக்கள் கிடைக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • சௌத்இந்தியன்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கூனி மீன் 2 கப்
  2. முருங்கை இலை 4 கப்
  3. தேங்காய் அரை மூடி
  4. பச்சை மிளகாய் ஒன்று
  5. பூண்டு 2 பல்
  6. சீரகம் 1 டீஸ்பூன்
  7. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  8. கடுகு தாளிக்க
  9. கறிவேப்பிலை இரண்டு கொத்து
  10. சின்ன வெங்காயம் ஐந்து

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு வாணலியில் சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு அது சூடானதும் அதில் முருங்கை இலை போட்டு வதக்கவும்
  2. பத்து நிமிடங்கள் வதங்கிய பிறகு அதன் மீது கூனியை வைத்து சிறு தீயில் வேக விடவும்.
  3. அது வேகும் நேரத்தில் தேங்காயுடன் பச்சை மிளகாய், சீரகம், பூண்டு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு அரைக்கவும்.
  4. கூனியும் முருங்கைக்கீரையும் நன்கு வெந்தவுடன் அதனுடன் இந்த அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கிளறி 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
  5. உப்பு சரி பார்த்து கொள்ளவும்
  6. பின்னர் இதன் மீது கடுகு, கருவேப்பிலை, சின்ன வெங்காயத்தை எண்ணெயில் தாளித்து மேலே ஊற்றி சோறுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்