வீடு / சமையல் குறிப்பு / உடைத்த முட்டை குழம்பு

Photo of Broken egg curry by jeyaveni chinniah at BetterButter
268
2
0.0(0)
0

உடைத்த முட்டை குழம்பு

Aug-11-2018
jeyaveni chinniah
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

உடைத்த முட்டை குழம்பு செய்முறை பற்றி

சுவையான புரதம் நிறைந்த குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முட்டை-3
  2. உருளை கிழங்கு-2
  3. வெங்காயம்-1 நீளமாக நறுக்கியது
  4. தக்காளி-1 நீளமாக நறுக்கியது
  5. பச்சை மிளகாய்-1
  6. தேங்காய் சிறிதளவு
  7. பெருஞ்சீரகம்-1 ஸ்பூன்
  8. முந்திரி பருப்பு-4
  9. கசகசா-1 ஸ்பூன்
  10. கறிவேப்பிலை
  11. கடுகு
  12. மஞ்சள் தூள்-சிறிதளவு
  13. மிளகாய்த்தூள்-1/2 ஸ்பூன்
  14. உப்பு தேவையான அளவு
  15. ஏலக்காய்,அண்ணாசி பூ,
  16. பட்டை கிராம்பு
  17. ஜாதிபத்திரி -1

வழிமுறைகள்

  1. உருளை கிழங்கை தோல் நீக்கி துண்டுகளாக 3/4 ஆக வேக வைத்து எடுக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருஞ்சீரகம் கிராம்பு ஏலக்காய் அண்ணாசி பூ பட்டை ஜாதிபத்திரி கறிவேப்பிலை சேர்த்து நன்றாக தாளிக்கவும்
  3. வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்
  4. தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
  5. தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்
  6. மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
  7. வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் மூடி கொதிக்க விடவும்
  8. தேங்காய், பெருஞ்சீரகம், முந்திரி பருப்பு, கசகசா சேர்த்து நன்றாக விழுதாக அரைத்து கொள்ளவும்
  9. அரைத்த விழுதை வாணலியில் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்
  10. பின்னர் குழம்பில் உள்ள காய்கறிகளை தனியாக எடுத்து வைக்கவும்
  11. அடுப்பை குறைந்த தீயில் வைத்து. முட்டைகளை கவனமாக உடைத்து ஊற்றவும்
  12. மூடி வைத்து 10-15 நிமிடங்கள் கழித்து காய்கறிகளை சேர்க்கவும்
  13. சுவையான முட்டை குழம்பை சூடான சாதம் , ஆப்பம், இடியாப்பம் என அனைத்து உணவுடனும் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்