வீடு / சமையல் குறிப்பு / பொட்டுக்கடலை லட்டு

Photo of Roasted Bengal gram Laddu by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
518
4
5.0(0)
0

பொட்டுக்கடலை லட்டு

Aug-11-2018
Wajithajasmine Raja mohamed sait
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பொட்டுக்கடலை லட்டு செய்முறை பற்றி

பொட்டுக்கடலையில் அதிகளவு சத்துக்கள் உள்ளது. இதில் அதிகமாக டயட்ரி ஃபைபர் இருப்பதால் மலச்சிக்கல் வராமல் தடுக்கும். இதய சம்பந்தமான நோய்களில் இருந்தும் காக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பொட்டுக்கடலையை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். பொட்டுக்கடலையை வைத்து எளிதாக செய்யக்கூடிய லட்டு செயல்முறையை இங்கு பார்க்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பொட்டுக்கடலை - 1 கப்
  2. ப்ரவுன் சுகர் - 1/2 கப்
  3. ஏலக்காய் - 2
  4. நெய் - 3-4 தேக்கரண்டி
  5. முந்திரி - 6 பொடியாக நறுக்கியது
  6. உலர்ந்த திராட்சை - 10
  7. தண்ணீர் - சிறிதளவு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. முதலில் பொட்டுக்கடலையை மிக்சியில் பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
  3. ப்ரவுன் சுகர் மற்றும் ஏலக்காயையும் மிக்சியில் பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
  4. ஒரு பாத்திரத்தில் இரண்டையும் நன்கு மிக்ஸ் செய்து வைத்துக்கொள்ளவும்.
  5. அடுப்பில் கடாயை வைத்து 1 தேக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரி , உலர்ந்த திராட்சை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
  6. அதே கடாயில் மேலும் 2 தேக்கரண்டி நெய் சேர்த்து கலந்து வைத்துள்ள பொட்டுக்கடலை ப்ரவுன் சுகரை சேர்த்து நன்றாக கிளறவும்.
  7. பொட்டுக்கடலையும் சுகரும் நெய்யுடன் சேர்ந்து நன்கு இலகி வரும். அப்பொழுது சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கெட்டியாக வரும் வரை கிளறவும்.
  8. இறுதியாக வறுத்து வைத்துள்ள முந்திரி, உலர்ந்த திராட்சையை சேர்த்து இலேசாக கிளறி அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிடவும்.
  9. நன்கு ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டினால் சுவையான ஆரோக்கியமான பொட்டுக்கடலை லட்டு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்