வீடு / சமையல் குறிப்பு / சோயா பனீர் சூப்

Photo of Soya paneer soup by Krishnasamy Vidya Valli at BetterButter
0
0
0(0)
0

சோயா பனீர் சூப்

Aug-12-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

சோயா பனீர் சூப் செய்முறை பற்றி

புரோட்டீன் அதிகம் நிறைந்த சோயா மற்றும் பனீர் வைத்து செய்யும் ஆரோக்கியமான சூப் இது.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • రాత్రి విందు
  • కలయిక
  • ప్రెజర్ కుక్
  • ఉడికించాలి
  • సూపులు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. சோயா 1/8 கப்
  2. பனீர் 6 முதல் 8 துண்டுகள்
  3. பாசிப்பருப்பு 2 தேக்கரண்டி
  4. வெங்காயம் பொடியாக நறுக்கியது ஒரு மேசைக்கரண்டி
  5. தக்காளி ஒன்று சிறியது
  6. உப்பு கால் தேக்கரண்டி
  7. மிளகு பொடி சீரகப் பொடி தனியா பொடி கரம் மசாலா தலா 4 சிட்டிகை
  8. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது அரை தேக்கரண்டி
  9. எலுமிச்சை சாறு அரை தேக்கரண்டி
  10. தாளிக்க தேவையானவை
  11. வெண்ணெய் அரை தேக்கரண்டி
  12. சீரகம் கால் தேக்கரண்டி
  13. இஞ்சி பூண்டு விழுது கால் தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. சோயா மற்றும் பாசிப்பருப்பை குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. தக்காளியை அரைத்து வெங்காயத்துடன் சேர்க்கவும்
  4. பாசிப் பருப்பை தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து சேர்க்கவும்
  5. வேக வைத்த சோயா சேர்த்து கொதிக்க விடவும்
  6. உப்பு மற்றும் எல்லா பொடிகளும் சேர்க்கவும்
  7. பனீர் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்
  8. எலுமிச்சை சாறு கலந்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்