வீடு / சமையல் குறிப்பு / தட்டப்பயறு பிரியாணி

Photo of Karamani biryani by hajirasheed haroon at BetterButter
1097
2
0.0(0)
0

தட்டப்பயறு பிரியாணி

Aug-12-2018
hajirasheed haroon
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தட்டப்பயறு பிரியாணி செய்முறை பற்றி

தட்டப்பயறு பாஸ்மதி அரிசி இஞ்சி பூண்டு விழுது புதினா கொத்தமல்லி இலை வெங்காயம் தக்காளி சேர்த்து செய்துள்ளது ஆரோக்கியமானது குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தட்டப்பயறு 100 கிராம்
  2. பாஸ்மதி அரிசி ஒரு கப்
  3. வெங்காயம்-3
  4. தக்காளி-2
  5. இஞ்சி பூண்டு விழுது 3ஸ்பூன்
  6. புதினா மல்லி இலை சிறிதளவு
  7. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  8. மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  9. கரம் மசாலா ஒரு ஸ்பூன்
  10. மல்லித் தூள் ஒரு ஸ்பூன்
  11. எண்ணெய் தேவையான அளவு
  12. உப்பு தேவையான அளவு
  13. தாளிப்பதற்கு பட்டை ஏலக்காய் கிராம்பு பிரிஞ்சி இலை

வழிமுறைகள்

  1. தட்டப் பயறை ஊற வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. வெங்காயம் தக்காளி நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்
  3. பாசுமதி அரிசியை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்
  4. குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை ஏலக்காய் பிரிஞ்சி இலை சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் வதங்கியவுடன்தக்காளி இஞ்சி-பூண்டு விழுது புதினா மல்லி இலை சேர்த்து வதக்கவும் வதங்கியவுடன் அதில் வேக வைத்த பயறு உப்பு சேர்த்து கிளறவும்
  5. அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் மல்லி தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி 2 டம்ளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும்
  6. தண்ணீர் கொதி வந்ததும் ஊற வைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து ஒரு விசில் வந்ததும் அடுப்பை ஆஃப் செய்து விசில் அடங்கியதும் பரிமாறலாம்
  7. சுவையான தட்டப்பயறு பிரியாணி தயார்
  8. பிரியாணி செய்வது போன்றே கறிக்கு பதிலாக தட்டை பயறு சேர்த்து செய்துள்ளேன்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்