வீடு / சமையல் குறிப்பு / வெள்ளை கொண்டைக்கடலை புளிக்குழம்பு

Photo of White chana Puli Kulambu by hajirasheed haroon at BetterButter
1274
2
0.0(0)
0

வெள்ளை கொண்டைக்கடலை புளிக்குழம்பு

Aug-12-2018
hajirasheed haroon
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெள்ளை கொண்டைக்கடலை புளிக்குழம்பு செய்முறை பற்றி

வெள்ளை சுண்டல் சேர்த்து செய்துள்ளது புரோட்டீன் சத்து நிறைந்துள்ளது சைட் டிஷ் ஆக சாப்பிடலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெள்ளை சுண்டல் ஒரு கப்
  2. சாம்பார் வெங்காயம் 100 கிராம்
  3. தக்காளி-2
  4. புளிக்கரைசல் ஒரு கப்
  5. பூண்டு-10 பல்
  6. கறிவேப்பிலை சிறிதளவு
  7. மஞ்சள் தூள் கால் சிட்டிகை
  8. மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  9. தனியாத்தூள் ஒரு டீஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. தேங்காய் அரை மூடி
  12. தாளிப்பதற்கு கடுகு சீரகம் வெந்தயம்

வழிமுறைகள்

  1. சுண்டக்கடலை தண்ணீரில் 3 மணி நேரம் ஊறவைத்து வேகவைத்துக் கொள்ளவும்
  2. வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் தேங்காயை விழுதாக அரைத்துக் கொள்ளவும்
  3. குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சீரகம் வெந்தயம் கறிவேப்பிலை சின்ன வெங்காயம் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும்
  4. இதில் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மல்லித்தூள் தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்
  5. கொதி வந்தவுடன் அதில் புளி கரைசல் ஊற்றி கொதிக்க விடவும் குழம்பு நன்கு கொதி வந்த உடன் வேக வைத்த வெள்ளை சுண்டல் தேங்காய் விழுது சேர்த்து குக்கரை விசில் போட்டு மூடி விடவும் ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை ஆப் செய்து பரிமாறலாம்
  6. இந்த புளிக் குழம்பை சப்பாத்தி இட்லி தோசை சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்