வீடு / சமையல் குறிப்பு / அரிசி இல்லா பருப்பு தோசை

Photo of Dal dosai without rice by Krishnasamy Vidya Valli at BetterButter
0
0
0(0)
0

அரிசி இல்லா பருப்பு தோசை

Aug-12-2018
Krishnasamy Vidya Valli
130 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

அரிசி இல்லா பருப்பு தோசை செய்முறை பற்றி

அரிசி இல்லாமல் வெறும் பருப்புகள் மட்டும் வைத்து செய்யும் அருமையான ஆரோக்கியமான தோசை இது. ஒருவருக்கு 2 வீதம் 5 நபர்களுக்கு கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • కలయిక
  • అల్పాహారం మరియు బ్రంచ్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அரைக்க தேவையானவை
  2. உருட்டு உளுந்து கால் கப்
  3. துவரம் பருப்பு 1/8 கப்
  4. பச்சை பயிறு 1/8 கப்
  5. பாசிப்பருப்பு கால் கப்
  6. கருப்பு கொண்டை கடலை வெள்ளை கொண்டைக்கடலை சோயா வேர்க்கடலை தலா ஒரு மேஜைக்கரண்டி
  7. உப்பு ஒரு தேக்கரண்டி
  8. தேங்காய் துருவல் 1/8 தேக்கரண்டி
  9. மிளகாய் வத்தல் பச்சைமிளகாய் தலா 2
  10. பெருங்காயம் கால் தேக்கரண்டி
  11. அரைத்தபின் மாவில் கலப்பதற்கு தேவையானவை
  12. கேரட் மற்றும் வெள்ளரி துருவல் தலா 1 மேசைக்கரண்டி
  13. கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கியது ஒரு மேசைக்கரண்டி
  14. தோசை வார்ப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. பருப்புகளை 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
  2. அரைக்க கொடுக்கப்பட்ட மற்ற பொருட்கள் எல்லாம் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  3. கேரட் துருவல் வெள்ளரி துருவல் கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. தோசைக் கல்லில் எண்ணெய் தடவி காய்ந்ததும் மாவு விட்டு தோசை வார்த்து எடுக்கவும்
  5. சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்