வீடு / சமையல் குறிப்பு / சோயா பனீர் கிரேவி

Photo of Soya paneer gravy by Krishnasamy Vidya Valli at BetterButter
635
0
0.0(0)
0

சோயா பனீர் கிரேவி

Aug-12-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சோயா பனீர் கிரேவி செய்முறை பற்றி

சோயா பனீர் இரண்டிலுமே புரதச் சத்து அதிகம் உள்ளது. இரண்டையும் வைத்து செய்யும் எளிமையான கிரேவி இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஃப்யூஷன்
  • ஸ்டிர் ஃபிரை
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சோயா கால் கப்
  2. பனீர் 10 முதல் 12 துண்டுகள்
  3. வெங்காயம் ஒன்று
  4. தக்காளி ஒன்று
  5. முந்திரிப் பருப்புகள் 5 முதல் 8
  6. உப்பு அரை தேக்கரண்டி
  7. காஷ்மீரி சில்லி பவுடர் அரை தேக்கரண்டி
  8. தனியா பொடி மஞ்சள் பொடி சீரகப் பொடி கரம் மசாலா பொடி கால் தேக்கரண்டி
  9. ஃப்ரெஷ் க்ரீம் 1/8 கப்
  10. கசூரி மேத்தி 1 தேக்கரண்டி
  11. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது ஒரு தேக்கரண்டி
  12. தாளிக்க தேவையானவை
  13. எண்ணெய் அல்லது வெண்ணெய் 1 தேக்கரண்டி
  14. பட்டை ஒரு சிறிய துண்டு
  15. ஏலக்காய் கிராம்பு தலா 2
  16. இஞ்சி பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி
  17. சீரகம் அரை தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. சோயாவை 10 நிமிடம் ஊற வைத்து குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. முந்திரிப் பருப்பை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  3. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. தக்காளி சேர்த்து வதக்கவும்
  5. வேக வைத்த சோயா சேர்க்கவும்
  6. உப்பு முந்திரி அரைத்த விழுது மற்றும் எல்லா பொடிகளையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்
  7. பனீர் துண்டுகளை சேர்த்து ஒரு கொதி விடவும்
  8. கசூரி மேத்தி மற்றும் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து இறக்கவும்
  9. கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்