வீடு / சமையல் குறிப்பு / Protein food festival

Photo of Protein food festival by pavumidha arif at BetterButter
0
5
5(1)
0

Protein food festival

Aug-13-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
135 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • కఠినము
  • పండుగలాగా
  • తమిళనాడు
  • పెనం పై వేయించటం/పాన్ ఫ్రై
  • ప్రెజర్ కుక్
  • మిళితం
  • ఉడికించాలి
  • వేయించేవి
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சீரக சம்பா மட்டன் பிரியாணி:::
  2. அரிசி 1 மற்றும் 1/2 கப்
  3. மட்டன் துண்டு 1/2 கிலோ
  4. வெங்காயம் 2
  5. பட்டை 1
  6. கிராம்பு 2
  7. ஏலக்காய் 2
  8. தக்காளி 2
  9. கரம் மசாலா 1 டீஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. தேங்காய் பால் 1 கப்
  12. நெய் தேவையான அளவு
  13. மிளகாய் தூள் 2 டீஸ்பூன்
  14. மல்லி இலை சிறிது
  15. புதினா இலை சிறிது
  16. தயிர் 1/2 கப்
  17. அரைக்க::
  18. பட்டை 1/2
  19. கிராம்பு 2
  20. ஏலக்காய் 1
  21. வெங்காயம் 1
  22. இஞ்சி 2
  23. பூண்டு 8
  24. தயிர் பச்சடி:::
  25. தயிர் 1 கப்
  26. கேரட் 2
  27. உப்பு தேவையான அளவு
  28. மல்லி இலை சிறிது
  29. பாசிப்பருப்பு ப்ரை::
  30. பாசிப்பருப்பு 1/2 கப்
  31. எண்ணெய் தேவையான அளவு
  32. உப்பு சிறிது
  33. மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
  34. மிளகு தூள் 1/2 டீஸ்பூன்
  35. சிக்கன் ப்ரை:::
  36. சிக்கன் துண்டு 1/2 கப்
  37. தயிர் 5 ஸ்பூன்
  38. இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
  39. உப்பு தேவையான அளவு
  40. சிக்கன் பொடி 2 டீஸ்பூன்
  41. எண்ணெய் தேவையான அளவு
  42. இறால் குழம்பு:::;::;
  43. இறால் 1 கப்
  44. மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
  45. மிளகாய் தூள் 2 டீஸ்பூன்
  46. மல்லி தூள் 1 டீஸ்பூன்
  47. மிளகு சீரகம் தூள் 2 டீஸ்பூன்
  48. தேங்காய் பால் 1/2 கப்
  49. உப்பு தேவையான அளவு
  50. எண்ணெய் தேவையான அளவு
  51. மல்லி இலை சிறிது
  52. வெங்காயம் 1
  53. தக்காளி 1
  54. இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
  55. சிக்கன் கிரேவி:::::
  56. வெங்காயம் 2
  57. தக்காளி 1
  58. இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
  59. மல்லி பொடி 2 டீஸ்பூன்
  60. மிளகாய் தூள் 2 டீஸ்பூன்
  61. மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
  62. மல்லி இலை சிறிது
  63. உப்பு தேவையான அளவு
  64. எண்ணெய் தேவையான அளவு
  65. சிக்கன் துண்டுகள் 1 கப்
  66. எலும்பு போட்ட சாம்பார்::::
  67. முருங்கை காய் 1
  68. கத்திரிக்காய் 2
  69. உருளைக்கிழங்கு 2
  70. சின்ன வெங்காயம் 7
  71. பூண்டு 5
  72. மல்லி தூள் 2 டீஸ்பூன்
  73. மிளகாய் தூள் 2 டீஸ்பூன்
  74. பெருங்காயம் சிறிது
  75. மட்டன் எலும்பு 8
  76. உப்பு தேவையான அளவு
  77. எண்ணெய் தே

வழிமுறைகள்

  1. சீரக சம்ப மட்டன் பிரியாணி::::
  2. அரிசியை 20 நிமிடம் ஊறவைக்கவும்
  3. மட்டனை குக்கரில் 4-5 விசில் வரை விட்டு எடுக்கவும்
  4. மிக்ஸியில் வெங்காயம் இஞ்சி பூண்டு பட்டை ஏலக்காய் கிராம்பு சேர்த்து நன்கு அரைக்கவும்
  5. வாணலியில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு தாளிக்கவும்
  6. பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் அரைத்த வெங்காய பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
  7. இப்போது தக்காளி சேர்த்து நன்கு கிளறவும்.5 நிமிடம் பின்னர் மிளகாய்த்தூள், கரம் மசாலா, பிரியாணி மசாலா சேர்த்து நன்கு கிளறவும்
  8. இப்பொழுது தயிர் மற்றும் மட்டன் சேர்த்து நன்கு கிளறவும்
  9. மல்லி இலை ,புதினா இலை சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவு தேங்காய் பால் மற்றும் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
  10. இப்போது அரிசி சேர்த்து அரை வேக்காடு வரும் வரை வேக விடவும்.பின் தம்மில் வைத்து நன்றாக வெந்ததும் அடுப்பை அணைக்கவும்
  11. சுவையான சீரக சம்பா மட்டன் பிரியாணி தயார்
  12. எலும்பு போட்ட சாம்பார் செய்வதற்கு::
  13. வாணலியில் பருப்பு மற்றும் தக்காளி சேர்த்து லேசாக வேக விடவும். குக்கரில் மட்டன் எலும்பு சேர்த்து 5 விசில் வரை விட்டு எடுக்கவும்
  14. பின்னர் வாணலியில் பாத்திரத்தில் கத்திரிக்காய், முருங்கை காய்,உருளைக்கிழங்கு ,வெங்காயம், பூண்டு சேர்த்து கிளறவும்.
  15. பின்னர் மல்லி தூள்,மிளகாய் தூள், மஞ்சள் தூள்,பெருங்காயம்,சீரகம் சேர்த்து கொதிக்க விடவும்
  16. உப்பு மற்றும் மல்லி இலை சேர்த்து கிளறவும்.நன்றாக கொதித்த பின் பருப்பு மற்றும் எலும்பினை சேர்த்து கொதிக்க விடவும்.சிறிது புளி கரைசல் சேர்த்து கொள்ளவும்
  17. நன்றாக வெந்ததும் கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், வெங்காயம், மிளகாய் தூள் சேர்த்து தாளித்து குழம்பில் ஊற்றவும்
  18. 15 நிமிடம் பின் அணைத்து விடவும். சுவையான எலும்பு போட்ட சாம்பார் தயார்
  19. கேரட் தயிர் பச்சடி செய்வதற்கு:::::
  20. ஒரு பாத்திரத்தில் தயிர், நறுக்கிய வெங்காயம், உப்பு, துருவிய கேரட் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
  21. சிக்கன் ப்ரை:::::
  22. சிக்கன் துண்டுகளை சிறிதாக நறுக்கி கொள்ளவும்
  23. ஒரு பாத்திரத்தில் சிக்கன் துண்டுகள்,இஞ்சி பூண்டு விழுது, தயிர், உப்பு, சிக்கன் பொடி சேர்த்து.30 நிமிடம் ஊற வைக்கவும்
  24. பின் கடாயில் எண்ணெய் ஊற்றி சிக்கன் துண்டுகளை சிறிது சிறிதாக பொரித்து எடுக்கவும்.காரமான சிக்கன் ப்ரை தயார்.
  25. பொரித்த பாசிபருப்பு ப்ரை:::
  26. பாசி பருப்பினை நன்றாக கழுவி காய வைத்து உலர்த்தி கொள்ளவும்.
  27. பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி பொரித்து எடுக்கவும்
  28. அதில் மிளகாய் தூள், உப்பு, மிளகு தூள் சேர்த்து கிளறனால் சுவையான பாசி பருப்பு ப்ரை தயார்
  29. இறால் குழம்பு செய்வதற்கு ;;;;
  30. கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கிளறவும்
  31. பின் தக்காளி ,உப்பு, மிளகாய் தூள் சேர்த்து 5 நிமிடம் கிளறவும்
  32. இப்போது இறால் துண்டுகளை சேர்த்து மஞ்சள் தூள் சேர்த்து லேசாக கிளறவும். எண்ணெய்யில் இறாலினை சுருள விடவும்.
  33. பின்னர் தேங்காய் பால் மற்றும் மிளகு சீரகம் தூள் சேர்த்து நன்றாக கிளறவும். நன்றாக குழம்பு சிறிது வற்றிய பின் மல்லி இலை சேர்த்து 5 நிமிடம் பின்னர் அடுப்பை அணைத்து விடவும்
  34. சுவையான இறால் குழம்பு தயார்
  35. சிக்கன் கிரேவி செய்வதற்கு::::
  36. குக்கரில் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை,வெங்காயம்,தக்காளி சேர்த்து வதக்கவும்
  37. பின்னர் பச்சை மிளகாய்,இஞ்சி பூண்டு விழுது,உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சிக்கன் தூள் சேர்த்து கிளறவும்
  38. இப்போது சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறவும்.
  39. சிறிது தேங்காய் பால் மற்றும் மல்லி இலை ஊற்றி 3 விசில் விடவும்.
  40. காரமான ருசியான சிக்கன் கிரேவி தயார்.
  41. சுவையான மற்றும் ஆரோக்கியமான புரத உணவு விருந்து தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
fithara
Aug-13-2018
fithara   Aug-13-2018

Awesome

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்