வீடு / சமையல் குறிப்பு / பனீர் ஸ்டஃப்டு கேப்சிகம்

Photo of Paneer stuffed Capsicum by Jayasakthi Ekambaram at BetterButter
515
0
0.0(0)
0

பனீர் ஸ்டஃப்டு கேப்சிகம்

Aug-13-2018
Jayasakthi Ekambaram
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பனீர் ஸ்டஃப்டு கேப்சிகம் செய்முறை பற்றி

குடை மிளகாயின் உள்ளே பனீரும் காய்கறி கலவையும் சேர்த்து வைத்து ஸ்டஃப் செய்வது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பெரிய குடை மிளகாய் பாதி
  2. துருவிய பனீர் 100 கிராம்
  3. துருவிய சீஸ் கியூப் 2
  4. வெங்காயம் ஒன்று
  5. பச்சை மிளகாய் ஒன்று
  6. தக்காளி ஒன்று
  7. சிறிய கேரட் ஒன்று
  8. கொத்தமல்லி தழை அரை கைப்பிடி அளவு
  9. ஓரிகேனோ ஒரு ஸ்பூன்
  10. மிளகாய்த்தூள் முக்கால் டீஸ்பூன்
  11. பூண்டு பற்கள் 6
  12. உப்புத்தூள் முக்கால் ஸ்பூன்
  13. வெண்ணெய் ஒரு ஸ்பூன்
  14. எண்ணெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி கொத்தமல்லி தழையை பொடியாக அரிந்துக் கொள்ளவும்
  2. பனீர் சீஸ் இரண்டையும் துருவிக் கொள்ளவும்
  3. கேரட்டை பொடியாக அரிந்து கொள்ளவும்
  4. பூண்டுகளை பொடியாக அரிந்து கொள்ளவும்
  5. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் வெண்ணெய் இரண்டையும் ஊற்றவும்
  6. எண்ணெய் சூடானதும் பூண்டு பற்களைப் போட்டு வதக்கவும்
  7. அடுத்தது வெங்காயம் கேரட் பச்சை மிளகாய் மூன்றையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்
  8. பனீரை போட்டு வதக்கவும்
  9. மிளகாய்த்தூள் ஓரிகேனோ உப்பு தூள் போட்டு வதக்கவும்
  10. அடுப்பை ஆப் செய்யவும்
  11. ஒரு ஸ்பூன் சீஸ், கொத்தமல்லி தழை தூவி கிளறவும்
  12. எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து ஆறவிடவும்
  13. குடைமிளகாயை நீளவாக்கில் கட் பண்ணி உள்ளே இருக்கும் விதைகளை நீக்கவும்
  14. நாம் வதக்கி வைத்திருக்கும் கலவையை ஒரு ஸ்பூனில் எடுத்து குடை மிளகாயின் உள்ளே நிரப்பவும்
  15. இந்தக் கலவையை நன்றாக உள்ளே வைத்து அழுத்தி மேலே சீஸ் துருவலை போடவும்
  16. ஒரு குக்கரின் உள்ளே ஒரு கப் கல் உப்பை கொட்டி நன்றாக 15 நிமிடம் சூடேற்றவும்
  17. நாம் செய்து வைத்திருக்கும் குடைமிளகாயை ஒரு தட்டில் வைத்து அதைக் குக்கரின் உள்ளே வைக்கவும்
  18. குக்கரை மூடியால் மூடவும்
  19. குக்கரின் மூடியில் இருக்கும் கேஸ்கெட் வெயிட் இரண்டையும் பயன்படுத்தக்கூடாது
  20. இதனை 20 நிமிடம் குறைந்த தீயில் பேக் பண்ணவும்
  21. 20 நிமிடத்திற்கு பிறகு குக்கரை திறந்து பரிமாறும் தட்டில் வைக்கவும்
  22. அதனை இரண்டாக கட் செய்து மேலே கொத்தமல்லித் தழை தூவவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்