வீடு / சமையல் குறிப்பு / முட்டை கேக் மசாலா

Photo of Egg cake masala by Rachell Revathi Samuel at BetterButter
439
1
0.0(0)
0

முட்டை கேக் மசாலா

Aug-13-2018
Rachell Revathi Samuel
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முட்டை கேக் மசாலா செய்முறை பற்றி

முட்டையை கலந்து வேகவைத்து செய்யப்படும் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • பாய்ளிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டை 2
  2. மிளகு சீரகத்தூள் 2 ஸ்பூன்
  3. எண்ணெய் 5 ஸ்பூன்
  4. கடுகு உளுத்தம்பருப்பு 1/2 ஸ்பூன்
  5. வெங்காயம் 2
  6. கருவேப்பிலை சிறிது
  7. மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
  8. மல்லித்தூள் 1 ஸ்பூன்
  9. கரம் மசாலா 1 ஸ்பூன்
  10. அரைக்க: தக்காளி 2
  11. பூண்டு 2
  12. இஞ்சி 1 சிறிய துண்டு
  13. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி வைக்கவும்
  2. அதில் முட்டையை உடைத்து ஊற்றவும்.
  3. உப்பு மற்றும் மிளகு சீரகத்தூள் சேர்க்கவும்
  4. முட்டைய நன்றாக கலந்து கொள்ளவும்.
  5. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி அதில் முட்டை உள்ள பாத்திரத்தை வைத்து மூடி வேக விடவும்.
  6. தண்ணீர் உள்ள பாத்திரத்தை மூடி வைக்கவும்
  7. 10 நிமிடங்கள் வேகவிடவும்.
  8. கத்தி வைத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
  9. வெட்டி வைத்த துண்டுகள்
  10. மிக்ஸியில் தக்காளி இஞ்சி பூண்டு சேர்த்து அரைக்கவும்
  11. அரைத்த தக்காளி
  12. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு சேர்க்கவும்.வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  13. மிளகாய்த்தூள் மல்லித்தூள் கரம் மசாலா சேர்க்கவும்
  14. அரைத்த தக்காளி சேர்த்து வதக்கவும்.
  15. வெட்டி வைத்த முட்டை கேக் துண்டுகளை சேர்க்கவும்.
  16. முட்டையில் மசாலா ஏறும் வரை வேகவைக்கவும்.தேவைப்பட்டால் உப்பு சேர்க்கவும்.
  17. சுவையான முட்டை கேக் மசாலா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்