வீடு / சமையல் குறிப்பு / முகலாய ஷானே ராண்

Photo of Mughal's Shaan e Raan (Lamb Leg Roast) by khadheeja irfana at BetterButter
686
0
0.0(0)
0

முகலாய ஷானே ராண்

Aug-13-2018
khadheeja irfana
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
150 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

முகலாய ஷானே ராண் செய்முறை பற்றி

Shaan e Raan is a mughal emperor's authentic recipe and very popular dish in indian cuisine.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கடினம்
  • ஈத்
  • முகலாய்
  • சிம்மெரிங்
  • ரோசஸ்டிங்
  • கிரில்லிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. மட்டன் முழு கால் பகுதி - 2 கிலோ
  2. தயிர் - அரை கப்
  3. வெங்காயம்-2 நீளமாக அரிந்தது
  4. இஞ்சி பூண்டு விழுது - இரண்டு மேசைக்கரண்டி
  5. தனி மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
  6. கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
  7. உப்பு - ஒரு மேசைக்கரண்டி (தேவைக்கேற்ப)
  8. மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
  9. சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
  10. இடித்த கொத்தமல்லி விதை - 2 மேஜைக்கரண்டி
  11. முந்திரிப்பருப்பு - 20 to 25
  12. தேங்காய் துருவியது - 2 மேஜைக்கரண்டி
  13. ஏலக்காய்த் தூள்- 1/4 தேக்கரண்டி
  14. ஜாதிக்காய் தூள் - 1/4தேக்கரண்டி
  15. எலுமிச்சை பழம் - 5 (சிறியதாக இருந்தால்)
  16. வினிகர் - இரண்டு மேசைக்கரண்டி
  17. கிரீம் -4 மேஜைக்கரண்டி
  18. தாழம்பூ தண்ணீர் (kewra essence)- 1 தேக்கரண்டி
  19. எண்ணெய் அல்லது நெய் -1/4 கப்

வழிமுறைகள்

  1. மட்டனுடைய முழு காலை நன்கு சுத்தம் செய்து கத்தியால் அதனுடைய சதைப்பகுதிகளில் நன்கு கீரில் போட்டு வைக்கவும்
  2. தயிரில் மேலே சொன்ன அனைத்து மசாலாக்களையும் ஒன்றாக சேர்த்து கலக்கி வைக்கவும்
  3. முதலில் கறியில் உப்பு மற்றும் வினிகர் சேர்த்து நன்கு பிரட்டி வைக்கவும்
  4. பின்னர் தயிரில் கலந்த அனைத்து மசாலாக்களையும் ஒன்றாக சேர்த்து கறியை நன்கு 10 நிமிடம் மசாஜ் செய்யவும்.இதனை இரவு முழுவதும் அல்லது 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
  5. மிக்ஸி ஜாரில் எலுமிச்சை சாறு தேங்காய் துருவல் முந்திரி இவைகளை சேர்த்து நன்கு அரைத்து வைக்கவும்.
  6. க்ரீம் மில் தாழம்பூ எசன்ஸ் சேர்த்து கலக்கி வைக்கவும்.
  7. ஒரு அடி கனமான வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து நன்கு பொரிய விடவும்.
  8. அடுத்து நன்கு ஊற வைத்த மட்டன் உடைய முழு காலை அதன் மேல் வைக்கவும்.
  9. குறைந்த தீயில் 10 நிமிடம் மூடி போட்டு வைக்கவும்.
  10. அடுத்து மட்டனை திருப்பி போடவும்.
  11. மட்டனில் இருந்து வெளியாகும் தண்ணீரிலேயே அதன் மசாலாக்களில் அதனை வேக விடவும் குறைந்த தீயில் 2 மணி நேரம் வேக விடவும்.
  12. மட்டன் ஒரு முக்கால் பதம் வெந்ததும் அரைத்து வைத்த தேங்காய் முந்திரி கலவையை சேர்க்கவும்.
  13. கிரீமில் தாழம்பூ தண்ணீர் சேர்த்து அதனை மட்டனோடு சேர்க்கவும்.
  14. மட்டன் நன்கு வெந்து அதனுடைய மசாலாக்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்த பின் அதனை முன் சூடு செய்த ஓவனில் கிரில் மோடில் ஒரு 10 நிமிடம் வைத்து எடுக்கவும்.
  15. சுவையான மிகவும் ரிச்சான மட்டன் முழு கால் ரோஸ்ட் ரெடி. புலாவ் சாலட் வகைகளோடு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்