BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பாசி பருப்பு பாயசம்

Photo of Moong dal porridge by Yasmin Shabira at BetterButter
0
0
0(0)
0

பாசி பருப்பு பாயசம்

Aug-13-2018
Yasmin Shabira
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாசி பருப்பு பாயசம் செய்முறை பற்றி

சுவையும் புரதச்சத்தும் நிறைந்த பாசிப்பருப்பு பாயசம்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • పండుగలాగా
  • తమిళనాడు
  • ఉడికించాలి
  • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు
  • వేగన్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முழு பாசிப்பருப்பு : 2 கப்
  2. வெல்லம் : 1/4 கிலோ
  3. தேங்காய் : 1
  4. நெய் : 1 தேக்கரண்டி
  5. முந்திரி, திராட்சை : தலா 5
  6. உப்பு : தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பாசிப்பருப்பை நன்றாக அலசி ப்ரெஷர் குக்கரில் இட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 6 விசில்களுக்கு வேக விடவும்
  2. பருப்பு நன்றாக குழைய வேண்டும்
  3. தேங்காய் துறுவி அரைத்து பாலெடுத்து திக்கான பாலை தனியாகவும் தண்ணி பாலை தனியாகவும் வைத்து கொள்ளவும்
  4. தண்ணி தேங்காய் பாலில் வேக வைத்த பாசிப்பருப்பை சேர்த்து நன்றாக கலந்து விடவும்
  5. பிறகு அதை மிதமான தீயில் வைத்து காய்ச்ச வேண்டும்
  6. கலவை நன்றாக வெந்து ஒன்று சேர்ந்த பிறகு வெல்லத்தை உடைத்து சேர்க்கவும்
  7. வெல்லம் நன்றாக கரைந்து நன்கு கொதித்ததும் திக்கான தேங்காய் பால் சேர்த்து உடனே அடுப்பை அணைத்து விடவும்
  8. ஒரு கடாயில் நெய் விட்டு காய்ந்ததும் முந்திரி திராட்சையை பொன்னிறமாக வறுத்து பாயசத்தில் சேர்க்கவும்
  9. அவ்வளவு தான் மிகவும் சுவையான சத்தான பாசிப்பருப்பு பாயசம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்