வீடு / சமையல் குறிப்பு / ப்ரொட்டீன் வடை

Photo of Protein vada by Benazer Abdul Kader at BetterButter
397
0
0.0(0)
0

ப்ரொட்டீன் வடை

Aug-13-2018
Benazer Abdul Kader
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

ப்ரொட்டீன் வடை செய்முறை பற்றி

ஊருக்கு வந்த பக்கத்தில் பலாப்பழம் சாப்பிட்ட கையோடு கொட்டையை பற்றி கூகிள் பண்ணினால் அது புரதச்சத்து நிறைந்தது என்பதை அறியவே விட்டு வைப்பதா?

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. பலாக்கொட்டை 1 கப்
  2. அரிசி மாவு 1 கப்
  3. வெங்காயம் 1
  4. பச்சை மிளகாய் 6
  5. முழுப்பெருஞ்சீரகம் அரை தே க
  6. இஞ்சி 1 இன்ச் அளவு
  7. கருவேப்பிலை 1 கொத்து
  8. மல்லி இலை 1 கொத்து
  9. மிளகாய் தூள் 1 தே க
  10. உப்பு தேவையான அளவு
  11. மஞ்சள் தூள் 1 சிட்டிகை

வழிமுறைகள்

  1. பலாக்கொட்டையை வெள்ளை தோல் நீக்கி சுத்தம் செய்து குக்கரில் 5 விசில் வேக விடவும்.
  2. பின்னர் பலாக்கொட்டையை மிக்ஸியில் அரைத்து சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.
  3. பின்னர் இதனுடன் அரிசி மாவு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, மல்லி இலை, மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருஞ்சீரகம், உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
  4. பின்னர் சிறிது சிறிதாக 1 கப் தண்ணீர் சேர்த்து வடை பதத்திற்கு கிளறவும்.
  5. பின்னர் வடை தட்டி எண்ணெய் காய்ந்ததும் பொன்னிறமாகும் வரை பொரித்து சூடாக காரச்சட்னி, தேநீருடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்