வீடு / சமையல் குறிப்பு / இண்டிபெண்டன்ஸ் டே காஜூ ஸ்வீட்

Photo of Independence Day Kaju Sweet by Jayasakthi Ekambaram at BetterButter
0
0
0(0)
0

இண்டிபெண்டன்ஸ் டே காஜூ ஸ்வீட்

Aug-13-2018
Jayasakthi Ekambaram
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

இண்டிபெண்டன்ஸ் டே காஜூ ஸ்வீட் செய்முறை பற்றி

முந்திரியை அரைத்து செய்யும் காஜூ ஸ்வீட்

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • తేలికైనవి
 • పండుగలాగా
 • ఉత్తర భారతీయ
 • మిళితం
 • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు
 • పీచుపదార్థాలు ఘనంగా ఉన్నవి

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

 1. கண்டென்ஸ்ட் மில்க் செய்வதற்கு
 2. பால் ஒரு கப்
 3. சர்க்கரை ஒரு கப்
 4. பால் பவுடர் ஒன்றரை கப்
 5. காஜூ ஸ்வீட் செய்வதற்கு
 6. முந்திரி பருப்பு 100 கிராம்
 7. கண் டென்ஸ்டு மில்க் அரை கப்
 8. பால் பவுடர் அரை கப்
 9. பச்சை கலர் 2 சிட்டிகை
 10. கேசரி கலர் 2 சிட்டிகை
 11. நெய் 8 ஸ்பூன்

வழிமுறைகள்

 1. ஒரு கப் பால் ஒரு கப் சர்க்கரை ஒன்றரை கப் பால் பவுடர் மூன்றையும் அடிகனமான பாத்திரத்தில் போட்டு கைவிடாமல் கிளறவும்
 2. அடுப்பை சிறு தீயில் வைத்து 10 நிமிடங்கள் கைவிடாமல் கிளற வேண்டும்
 3. அடுப்பை ஆஃப் செய்து இந்த கண்டென்ஸ்டு மில்க் ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும்
 4. முந்திரியை மிக்ஸியில் போட்டு பவுடராக அரைத்துக் கொள்ளவும்
 5. அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் நெய்யை ஊற்றவும்
 6. அதில் அரை கப் கண் டென்ஸ்டு மில்க் அரை கப் பால் பவுடர் சேர்த்து கைவிடாமல் கிளறவும்
 7. பிறகு முந்திரி பவுடரையும் அதில் கொட்டி கைவிடாமல் கிளறவும்
 8. நன்றாக சுருண்டு வரும்போது அதனை ஒரு தட்டில் எடுத்துக் கொள்ளவும்
 9. அந்த அந்த முந்திரி விழுதை மூன்று பாகங்களாக பிரித்துக் கொள்ளவும்
 10. ஒரு பிரிவை அப்படியே வைத்துக் கொள்ளவும் இரண்டாவது பிரிவில் சிகப்பு கலர் கலக்கவும் மூன்றாவது பிரிவில் பச்சை கலர் கலக்கவும்
 11. இப்போது மூன்று கலர் மாவையும் தனித்தனியாக உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்
 12. கையில் நெய் தடவிக் கொண்டால் ஒட்டாமல் வரும்
 13. மூன்று கலர் மாவையும் தனித்தனியாக வட்டங்களாக தட்டி கொள்ளவும்
 14. பச்சைக் கலர் வட்டத்தை பெரியதாக தட்டிக் கொள்ளவும் வெள்ளை கலர் வட்டம் அதைவிட கொஞ்சம் சிறியதாக இருக்கவேண்டும் சிகப்பு கலர் வட்டம் அதை விட சிறியதாக இருக்க வேண்டும்
 15. முதலில் பச்சை கலர் வட்டத்தை வைத்து அதன் மேல் வெள்ளை கலர் வட்டத்தை வைத்து அதன் மேல் சிகப்பு கலர் வட்டத்தை வைத்து கையால் நன்றாக அழுத்தி விடவும்
 16. தட்டில் அழகாக அடக்கவும்
 17. பார்ப்பதற்கு நம் தேசிய கொடி போல் இருக்கும்
 18. இப்போது நம் சுதந்திர தின காஜூ ஸ்வீட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்