வீடு / சமையல் குறிப்பு / 100% புரோட்டின் ப்பேக்டு - ஸ்டப்பிங் இன் ரெட் சாஸ்

124
1
0.0(0)
0

100% புரோட்டின் ப்பேக்டு - ஸ்டப்பிங் இன் ரெட் சாஸ்

Aug-13-2018
vani vani
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

100% புரோட்டின் ப்பேக்டு - ஸ்டப்பிங் இன் ரெட் சாஸ் செய்முறை பற்றி

சோயா பீன்ஸ் மற்றும் பன்னீரில் மிகவும் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. இந்த இரண்டையும் சேர்த்து செய்த இந்த உணவு புரதம் மட்டும் அல்ல சுவையிலும் குறைந்தது அல்ல

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சோயாபீன் சப்பாத்தி செய்வதற்கு
  2. சோயா பீன்ஸ் அரை கப்
  3. சோயா சங்ஸ் 1/4 கப்
  4. கோதுமை மாவு அரை கப்
  5. எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. தண்ணீர் தேவையான அளவு
  8. ரெட் சாஸ் செய்வதற்கு
  9. எண்ணெய் 2 டீஸ்பூன்
  10. நறுக்கிய பூண்டு ஒரு டீஸ்பூன்
  11. நறுக்கிய பெரிய வெங்காயம் 1/4 கப்
  12. தக்காளி-3
  13. காஷ்மீரி மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன்
  14. மிளகுத்தூள் கால் டீஸ்பூன்
  15. உப்பு தேவையான அளவு
  16. சில்லி ஃப்ளேக்ஸ் கால் டீஸ்பூன்
  17. இட்டாலியன் மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் கால் டீஸ்பூன்
  18. பன்னீர் செய்ய
  19. முழு கொழுப்பு பால் அரை லிட்டர்
  20. எலுமிச்சம்பழ சாறு 2 tsp
  21. பன்னீர் ஸ்டப்பிங் செய்ய
  22. வெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்
  23. நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று
  24. நறுக்கிய தக்காளி ஒன்று
  25. இஞ்சி பூண்டு விழுது அரை டீஸ்பூன்
  26. நறுக்கிய பச்சை குடைமிளகாய் சிறிதளவு
  27. நறுக்கிய கேரட் சிறிதளவு
  28. மிளகாய் தூள் 3/4 tsp
  29. மல்லி தூள் 1/2 tsp
  30. கரம் மசாலா தூள் 1/2 tsp
  31. பன்னீர் - 100 கிராம்
  32. டொமேட்டோ கெட்சப் - 1 tsp
  33. சில்லி சாஸ் ஒரு டீஸ்பூன்
  34. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சோயாபீன் சப்பாத்தி செய்ய
  2. சோயாபீனை நன்றாக சுத்தம் செய்துவிட்டு தண்ணீரில் 8 மணி நேரம் ஊற வைக்கவும்
  3. சோயா சங்கை சுடு தண்ணீரில் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்து எடுக்கவும்
  4. இரண்டையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  5. இதனுடன் தேவையான அளவிற்கு கோதுமை மாவு உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக்கொள்ளவும்
  6. இந்த மாவிலிருந்து சிறு உருண்டை எடுத்து சப்பாத்தியாக விரித்துக் கொள்ளவும்
  7. இந்த சப்பாத்தி மாவை கல்லில் போட்டு சப்பாத்தியாக சுட்டு எடுத்து நெய் தடவி வைத்துக் கொள்ளவும்
  8. பன்னீர் செய்ய
  9. ஒரு வாணலியில் பாலை சேர்த்து நன்றாகக் காய்ச்சவும்
  10. பால் பொங்கி வரும்போது அடுப்பை சிம்மில் வைத்து விட்டு எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்றாக கிளறவும்
  11. பால் திரிந்தவுடன் அதனை வெள்ளை துணியில் வடிகட்டிக் கொள்ளவும்
  12. தண்ணீர் அனைத்தும் நன்றாக வடிந்த பின் அதன் மீது ஒரு வெயிட் வைத்து 2 - 3 மணி நேரம் செட் செய்யவும்.
  13. 3 மணி நேரம் கழித்து எடுக்கவும்
  14. விருப்பமான வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும்
  15. ரெட் சாஸ் செய்ய
  16. தக்காளியை நன்றாகக் கழுவி விட்டு தண்ணீரில் போட்டு அதன் தோல் வரும் வரை கொதிக்க விடவும்.
  17. தக்காளி நன்றாக ஆறிய பின் தோலை எடுத்து விட்டு மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  18. ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதனுடன் நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  19. அரைத்த தக்காளி விழுதை சேர்த்து கொதிக்க விடவும்
  20. மீதமுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து கொஞ்சம் திக்காக வரும் வரை கொதிக்க விடவும்
  21. சாஸ் கொஞ்சம் திக்கான உடன் அடுப்பை அணைக்கவும்.
  22. பன்னீர் ஸ்டப்பிங் தயாரிக்க
  23. வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன் நறுக்கிய பெரிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது தக்காளி மூன்றையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்
  24. நறுக்கிய குடைமிளகாய் கேரட் சேர்த்து வதக்கவும்
  25. இப்போது அனைத்து மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
  26. பன்னீர் சேர்த்து நன்றாக வதக்கவும்
  27. கடைசியாக டொமேட்டோ சாஸ் சில்லி சாஸ் இரண்டையும் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்
  28. சோயாபீன் பிராங்கி செய்ய
  29. நாம் செய்து வைத்துள்ள சோயாபீன்ஸ் சப்பாத்தி எடுத்துக் கொள்ளவும்
  30. அதன் நடுவில் நம் தயார் செய்த ரெட் சாஸ் அப்ளை செய்யவும்
  31. அதன் மேல் நாம் தயாரித்த பன்னீர் ஸ்டாப்பிங்கை வைக்கவும்
  32. அதன் மேல் நறுக்கிய வெங்காயம் கேரட் வைக்கவும்
  33. இதன் மேல் கடைசியாக தேவையான அளவு ரெட் சாஸ் வைத்து கொள்ளவும்
  34. இப்போது சப்பாத்தியை சுருட்டிக் கொள்ளவும். அதை ஒரு டூத் பிக் வைத்து சேக்யூர் செய்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்