வீடு / சமையல் குறிப்பு / பட்டாணி குருமா

Photo of Peas gravy by Rachell Revathi Samuel at BetterButter
174
1
0.0(0)
0

பட்டாணி குருமா

Aug-13-2018
Rachell Revathi Samuel
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பட்டாணி குருமா செய்முறை பற்றி

புரோட்டின் நிறைந்த பட்டாணி வைத்து செய்யப்படும் குருமா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பட்டாணி 1 கப்
  2. எண்ணெய் 4 ஸ்பூன்
  3. கடுகு உளுத்தம்பருப்பு 1/2 ஸ்பூன்
  4. வெங்காயம் 1
  5. கருவேப்பிலை சிறிது
  6. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  7. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  8. கரம் மசாலா 1 ஸ்பூன்
  9. மல்லி தூள் 1 ஸ்பூன்
  10. வதக்கி அரைக்க : வெங்காயம் 2
  11. சீரகம் 1 ஸ்பூன்
  12. சோம்பு 1/2 ஸ்பூன்
  13. மிளகு 1/2 ஸ்பூன்
  14. துருவிய தேங்காய் 1/4 கப்
  15. தக்காளி 2
  16. பட்டை 1
  17. கிராம்பு 1
  18. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பட்டாணியை 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. குக்கரில் பட்டாணியை உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.
  3. அடுப்பில் வாணலியை வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு சீரகம் சோம்பு மிளகு சேர்த்து வதக்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  4. தேங்காய் துருவி கொள்ளவும்
  5. துருவிய தேங்காயுடன் வதக்கிய தக்காளி வெங்காயம் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  6. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து பின் நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை மிளகாய் வற்றல் சேர்த்து தாளிக்கவும்.இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்..
  7. மிளகாய்த்தூள் மல்லித்தூள் கரம் மசாலா சேர்க்கவும்.
  8. வேகவைத்த பட்டாணி சேர்க்கவும்
  9. அரைத்த மசாலாவை சேர்க்கவும்.தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
  10. பட்டாணியில் மசாலா ஏறும் வரை சிம்மில் வைத்து இறக்கவும்.
  11. சுவையான ஆரோக்கியமான பட்டாணி குருமா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்